( எம்.எப்.எம்.பஸீர்)
பராளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன உள்ளிட்ட மூவருக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழு, கொழும்பு மேல் நீதிமன்றில் தொடுத்துள்ள வழக்கு எதிர்வரும் மே 11 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு புதன்கிழமை (30) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது. இதன்போதே இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, மீன்பிடி துறைமுக அதிகார சபையின் முன்னாள் தலைவர் உபாலி லியனகே, அதன் முகாமைத்துவ பனிப்பாளர் நீல் ரவீந்ர முனசிங்க ஆகிய மூவரை பிரதிவாதிகளாக குறிப்பிட்டு இலஞ்ச ஊழல் ஆணைக் குழு இந்த விவகாரத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதலாம் திகதி மற்றும் அவ்வாண்டின் நவம்பர் முதலாம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் முகத்துவாரம் மீன் பிடி துறைமுகத்தை சீ கல்ப் யூ.கே. பிரைவட் லிமிடட் எனும் நிறுவனத்துக்கு குறைந்த பெறுமதியில் குத்தகைக்கு கொடுக்க, மீன் பிடித் துறைமுக திணைக்களத்தின் பணிப்பாளர் சபையை தூண்டியமை ஊடாக அரசாங்கத்துக்கு நட்டம் ஏற்படுத்தியதாக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM