இலங்கை நகர்த் திட்டமிடுவோர் நிறுவகத்தின் 40 ஆம் ஆண்டு நிறைவு விழா

30 Mar, 2022 | 05:23 PM
image

இலங்கை நகர்த் திட்டமிடுவோர் நிறுவகமானது, நகரத் திட்டமிடலாளர்களிற்கான தொழில்முறை நிறுவகமாக இலங்கை பாராளுமன்றத்தின் 23 ஆம் இலக்க 1986 ஆம் ஆண்டு சட்டமூலத்தினால் கூட்டிணைக்கப்பட்டதாகும். 

இந் நிறுவகமானது தனது 40 ஆம் ஆண்டு நிறைவினை இம்மாதம் 26, 2022 அன்று கொண்டாடியது. 

இவ்விழாவின் பிரதம அதிதியாக நார அபிவிருத்தி, கடலோர பாதுகாப்பு கழிவுப் பொருள் வெளியேற்றம், மற்றும் துப்புரவு ஏற்பாடுகள் இராஜாங்க அமைச்சர் நாலக்க கொடகேவா பங்கேற்றிருந்தார். 

இதன் போது நகர்த் தொழில்துறையில் சிறப்புற விளங்கும் நிறுவனங்களிற்கும் திட்டமிடலாளர்களிற்கும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. 

சிறந்த திட்டமிடல் (செயற்றிட்டங்கள்) எனும் பிரிவில் கனோபஸ் நிறுவனமும், சிறந்த திட்டமில் (கொள்கைள் மற்றும் நிகழ்ச்சித்திட்டங்கள்) எனம் பிரிவில் நகர அபிவிருத்தி அதிகார சபையும் விருதுகளினைப் பெற்றுக்கொண்டன. 

மேலும் சிறந்த வளர்ந்து வரும் திட்டமிடலாளர் எனும் விருதினை கனோபஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் க.துளசிவர்மன் அவர்களும், திட்டமிடலாளருக்கான வாழ்நாள் கௌரவ விருதினை ஜே. எம். ஏல். ஜயசேகர அவர்களும் பெற்றுக்கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right