மத்­தியில் அமைந்­துள்ள கூட்டு அர­சாங்­கத்தில் மக்கள் விடு­தலை முன்­னணி நேர­டி­யாக இணை­யா­விட்­டாலும் கள்­ளத்­த­ன­மாக இணைந்­து­கொண்­டுள்­ளது என மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் முன்னாள் தலை­வரும் மக்கள் சேவை கட்­சியின் தலை­வ­ரு­மான சோம­வன்ச அம­ர­சிங்க தெரி­வித்தார்.

அனு­ரா­த­பு­ரத்தில் இடம்­பெற்ற நிகழ்­வொன்றில் கலந்­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறு­கையில்,

தற்­போ­தைய அர­சாங்­கத்­துடன் மறை­முக தொடர்­பு­களை வைத்­தி­ருக்கும் மக்கள் விடு­தலை முன்­னணி வெளியில் அர­சாங்­கத்­துக்கு எதி­ரான கட்சி என இனம் காட்டும் வகையில் அர­சாங்­கத்­துக்கு எதி­ராகப் பேரணி செல்­கி­றது.

மக்கள் விடு­தலை முன்­ன­ணியில் இருந்து வெளி­யேறி மக்கள் சேவைக் கட்­சியை எதற்­காக ஆரம்­பித்­தீர்கள் என அதி­க­மா­ன­வர்கள் என்­னிடம் கேட்­கின்­றனர். மக்கள் விடு­தலை முன்­னணி இன்­றைக்கு 50 வரு­டங்­க­ளுக்கு முன் உரு­வாக்­கப்­பட்­ட­தாகும். 49ஆவது வருடம் கழிந்து சென்­று­கொண்­டி­ருக்கும் போது மக்கள் விடு­தலை முன்­னணி தடம்மாறி­யது. அதன் பய­ணப் பாதை பிழையாக மாறியது. அத­னால்தான் கட்­சியில் தொடர்ந்து இருக்­காமல் வெளி­யே­றி­விட்டேன். அவ்­வாறு இல்­லை­யென்றால் கடந்த சில தினங்­க­ளாக இடம்­பெற்ற சகல விட­யங்­க­ளுக்கும் நானும் பொறுப்புக் கூற­வேண்டி வந்­தி­ருக்கும்.

ரோஹண விஜே­வீர மக்கள் விடு­தலை முன்­ன­ணியை பொது மக்­களின் கட்­சி­யா­கவே கட்­டி­யெ­ழுப்­பினார். என்­றாலும் தற்­போ­தைய தலைவர் அதனை மறந்­துள்ளார். கட்­சியின் தற்­போ­தைய தலை­வர்கள் கறுப்பு சந்­தையின் கையா­ட்­க­ளா­கி­யுள்­ளனர். அவர்­களின் தேவைக்­கேற்ப செயற்­படும் பிரி­வி­னர்­க­ளா­கி­யுள்­ளனர். அத­னால்தான் கடந்த பொதுத் தேர்­தலில் மக்கள் விடு­தல முன்­ன­ணிக்கு மக்கள் வாக்­க­ளிக்­காமல் நிரா­க­ரித்­தனர்.

மேலும், இம்­முறை பொதுத் தேர்­தலின் பின்னர் கூட்டு அர­சாங்­க­மொன்று உரு­வா­னது. ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி இணைந்து அமைத்த இந்த கூட்டு அர­சாங்­கத்தில் மக்கள் விடு­தலை முன்­னணி மற்றும் தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பு வெளிப்­ப­டை­யாக இணை­யா­விட்­டாலும் கள்­ளத்­த­ன­மாக கூட்டுச் சேர்ந்­துள்­ளன. அனு­ர­கு­மா­ர­வுக்கு அதனை பொய் என்று சொல்ல முடி­யாது.

இவர்கள் பாரா­ளு­மன்­றத்­திற்குள் செயல்­படும் விதத்தில் அல்ல மறை­மு­க­மாக இணைந்தே செயல்­ப­டு­கின்­றனர். வெளியில் அரச எதிர்பு கட்சி போன்று அர­சாங்­கத்­துக்கு எதி­ராக பேர­ணி­களை நடத்தி மக்­களை ஏமாற்றி வரு­கின்­றனர்.

இப்­போது இந்த நாட்டை நிர்வகிப்பது கூட்டு அரசாங்கமல்ல. குழப்ப அரசாங்க மாகும். இந்த அரசில் குழப்பம் இல்லாத இடமில்லை.

அரசாங்கம் முழு நாட்டையும் குழப்பி வருகின்றது. தற்போது இந்த நாட்டில் அரசாங்கம் ஒன்று இல்லை என்பதே உண் மையான நிலைமையாகும் என்றார்.