கைதிகளை விடுதலை செய்யக்கோரி வட,கிழக்கில் இன்று பூரண ஹர்த்தால்

19 Nov, 2015 | 11:02 AM
image

தடுத்­து­வைக்­கப்­பட்­டுள்ள அனைத்து தமிழ் அர­சியல் கைதி­க­ளும் பொது­மன்­னிப்­ப­ளித்து விடு­தலை செய்­யப்­ப­ட­வேண் டும். பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை உடன் நீக்­க­வேண்டும் ஆகி­ய­ கோ­ரிக்­கை­களை வலி­யு­றுத்தி வடக்கு – கிழக்கு மாகாணங் களில் இன்று கடை­ய­டைப்பு, வேலை­நி­றுத்­தங்­களை மேற்­கொண்டு பூரண ஹர்த்­தாலை அனுஷ்­டிக்­கு­மாறு தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்­னணி ஆகி­யன அழைப்பு விடுத்­துள்­ள­ன.

அத்துடன் ஈழ­மக்கள் ஜன­நா­யக கட்சி, தமிழர் விடு­தலைக் கூட்­டணி, அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் ஆகிய கட்­சிகள் அமை­தி­யான முறையில் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்ள ஹர்த்­தா­லுக்கு பூரண ஆத­ரவை வழங்­கு­வ­தாக அறி­வித்­துள்­ளன.


வடக்கு மாகாண சபை, சர்­வ­மத தலை­வர்கள், வர்த்­தக சங்­கங்கள், தொழிற்­சங்­கங்கள், கல்விச் சமுகம், பல்­க­லைக்­க­ழக சமுகம், சிவில் அமைப்­புக்கள், பொது அமைப்­புக்கள், முஸ்லிம் அமைப்­புக்கள், இந்து, கத்­தோ­லிக்க அமைப்­புக்கள் உள்­ளிட்ட அனைத்து தரப்­பி­னரும் ஒத்­து­ழைப்­புக்­களை இந்த ஹர்த்தாலுக்கு வழங்­கு­வ­தாக அறி­வித்­துள்­ளன.


ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தமது விடு­தலை தொடர்­பாக வழங்­கிய வாக்­கு­றுதி நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. எமது விடு­தலை தொடர்­பாக உரிய உத்­த­ர­வாதம் வழங்­கப்­ப­ட­வேண்டும். எமது உற­வு­க­ளுடன் இணைந்து வாழ்­வ­தற்கு இட­ம­ளிக்­கப்­ப­ட­வேண்டும் என்­பதை வலி­யு­றுத்தி இடை­நி­றுத்­தி­யி­ருந்த தமது உண்­ணா­வி­ர­தப்­போ­ராட்­டத்தை கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை முதல் தமிழ் அரசியல் கைதிகள் ஆரம்­பித்­தி­ருந்­தனர்.


இந்­நி­லையில் அவர்­களின் விடு­த­லையை வலி­யு­றுத்­தியும், தமிழ் அர­சியல் கைதிகள் மேற்­கொண்­டுள்ள உண்­ணா­வி­ரதப் போராட்­டத்­துக்கு ஆத­ரவு தெரி­வித்தும் இன்று வெ ள்ளிக்­கி­ழமை வடக்கு கிழக்கில் இயல்­பு­நி­லையைப் புறக்­க­ணித்து காலை முதல் மாலை ஐந்து மணி வரை­யி­லான காலப்­ப­கு­தியில் அமை­தி­யான முறையில் பூரண ஹர்த்­தாலை அனுஷ்­டிப்­ப­தற்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது.



தமிழ் அர­சியல் கைதி­களின் விடு­தலை தொடர்­பாக அர­சாங்கம் எமக்கு வழங்­கிய வாக்­கு­றுதி நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. அதனால் ஏற்­பட்ட ஏமாற்­றத்தின் கார­ண­மாக இன்று ஹர்த்தால் அனுஷ்­டித்து போரா­ட­வேண்­டிய நிலைக்கு தள்­ளப்­பட்­டுள்ளோம். அர­சாங்கம் எமக்கும் சர்­வ­தே­சத்­திற்கும் அளித்த வாக்­கு­று­தியை உட­ன­டி­யாக நிறை­வேற்ற வேண்டும் என்­பதை அர­சாங்­கத்­திற்கும் சர்­வ­தேச சமூ­கத்­துக்கும் உரத்துச் சொல்லும் வகையில் நாம் இன்­றைய தினம் ஹர்த்­தலை அனுஷ்­டிக்­கின்றோம்.

இதற்கு அனைத்து தரப்­புக்­களும் ஒத்­து­ழைப்­புக்­களை வழங்கி சிறையில் வாடும் எமது சகோ­தரர்­களை விடு­தலை செய்­வ­தற்கு ஏக குரலில் வலி­யு­றுத்­துவோம் என தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலை­வரும்இ யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை.சேனா­தி­ராஜா தெரி­வித்­துள்ளார்.


அதே­வேளை வவு­னியா மாவட்­டத்தில் சகல வர்த்­தக நிலை­யங்­க­ளையும், வங்கி உட்­பட அரச மற்றும் தனியார் அலு­வ­ல­கங்­க­ளையும் மூடி இந்த ஹர்த்­தா­லுக்கு ஒத்­து­ழைப்பு வழங்­கு­மாறு வன்­னி­மா­வட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான ந.சிவ­சக்தி ஆனந்தன், சிவ­மோகன், வட­ம­காண சுகா­தார அமைச்சர் ப.சத்­திய லிங்கம் ஆகியோர் உட்­பட வட­மா­காண சபை உறுப்­பி­னர்கள் அனை­வரும் கோரி­க்கை விடுத்துள்ளனர். அத்துடன் பேரூந்­துகள், முச்­சக்­க­ர­ண­வண்­டிகள், பொது சேவைகள் ஆகி­ய­வற்றின் சங்­கங்கள் உட்­பட அனைத்து தரப்­பி­னரும் பூரண ஆத­ரவை வழங்­க­வேண்­டு­மென தமிழத் தேசியக் கூட்­ட­மைப்பு வேண்­டுகோள் விடுத்­துள்­ளது.


கைதி­களின் விடு­த­லையை வலி­யுத்தி முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்ள ஹர்த்­தா­லுக்கு மன்னார், முல்­லைத்­தீவு மாவட்­டங்­களில் அனைத்து தரப்­புக்­களும் ஒத்­து­ழைப்­புக்­களை வழங்க வேண்­டு­மென தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான செல்வம் அடைக்­க­ல­நாதன், சார்ஸ் இரு­த­ய­நாதன், சந்­தி­ஸ்ரீஸ்­கந்­த­ராஜா உட்­பட வட­மாகாண சபை உறுப்­பி­னர்கள் அனை­வரும் கோரி­யுள்­ளனர்.


அதே­வேளை, வடக்கு, கிழக்கில் இன்று நடை­பெ­ற­வுள்ள புரண ஹர்த்தால் ஊடாக அர­சியல் கைதிகள் அனை­வ­ரையும் பொது­மன்­னிப்பில் விடு­தலை செய்­யக்­கோரி அர­சாங்­கத்­திற்கு முதல் எச்­ச­ரிக்­கையை விடுப்­போ­மென கிழக்கு மாகா­ணத்தின் மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை மற்றும் திரு­கோ­ண­மலை மாவட்­டங்­களில் துண்­டுப்­பி­ர­சு­ரங்கள் ஒட்­டப்­பட்­டி­ருந்­தன. ஆரச அர­சார்ப்­பற்ற நிறு­வ­னங்கள், பாட­சா­லைகள், வர்த்­தக நிலை­யங்கள், உள்­ளிட்ட அனைத்து தரப்­பி­னரும் தமது ஒத்­து­ழைப்­புக்­களை வழங்­கு­மாறு கிழக்கு மாகாண தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கோரி­யுள்­ளனர்.


மட்­டக்­க­ளப்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான வியா­ழேந்­திரன், கோடீஸ்­வரன், யோகேஸ்­வரன் உட்­பட மாகா­ண­சபை உறுப்­பி­னர்கள் மட்­டக்­க­ளப்பு காந்தி பூங்கா முன்­றலில் தமிழ் அர­சியல் கைதி­களின் விடு­த­லையை வலி­யு­றுத்­தியும் அவர்­களின் உண்­ணா­வி­ரத போராட்­டத்­திற்கு ஆத­ரவு தெரிவித்து பாரிய ஆர்ப்­பாட்­டத்­தினை முன்­னெ­டுக்­க­வுள்­ள­துடன் மட்­டக்­க­ளப்பு மாவட்ட அர­சாங்க அதி­ப­ருக்கு மகஜர் ஒன்­றையும் கைய­ளிக்­க­வுள்­ள­னர். அத்துடன் தமிழ் அர­சியல் கைதி­களின் விடு­த­லைக்கு அர­சாங்கம் உரிய நட­வ­டிக்­கை­யெ­டுக்க தவ­றும்­பட்­சத்தில் கைதி­க­ளுக்கு ஆத­ர­வாக மக்கள் பிர­தி­நி­திகள் சுழற்சி முறை­யான உண்­ணா­வி­ரத போராட்­டத்­தினை மேற்­கொள்ளவுள்ளதாகவும் அறி­வித்­துள்­ளனர்.



கொடிய பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தின் கீழ் சிறை­களில் வாடும்­போது ஒரு சில­ருக்கு மட்டும் பிணை­வ­ழங்­கு­வதன் மூலம் சர்­வ­தேச சமூ­கத்தை ஏமாற்­று­வ­தற்கு அர­சாங்கம் முயல்­கின்­றது. விடு­த­லை­யின்றி சிறையில் வாடும் அர­சியல் கைதிகள் தாம் அனை­வரும் உட­ன­டி­யாக விடு­தலை செய்­யப்­படல் வேண்டும் என்ற கோரிக்­கை­யினை முன்­வைத்து சாகும் வரை­யான உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தில் தொடர்ந்தும் ஈடு­பட்­டு­வ­ரு­கின்­றனர். அர­சியல் கைதிகள் அனை­வரும் விடு­தலை செய்­யப்­படல் வேண்டும் என்ற அழுத்­தத்­தினை அர­சாங்­கத்தின் மீது ஏற்­ப­டுத்­தவும், இவ்­வி­டயம் தொடர்பில் சர்­வ­தேச சமூ­கத்தின் கவ­னத்தை ஈர்க்கும் முக­மா­கவும் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்ள பணிப்­பு­றக்­க­ணிப்­பா­னது திட்­ட­மிட்­ட­படி இன்று வெ ள்ளிக்­கி­ழமை இடம்­பெறும். இப்­போ­ராட்­டத்­திற்கு அனைத்துத் தரப்­புக்­க­ளதும் ஆத­ர­வினை கோரி­நிற்­கின்றோம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்­னணி கோரி­யுள்­ளது.


குறித்த தினத்தில் வர்த்­தக நிலை­யங்கள், பாட­சா­லைகள், பல்­க­லைக்­க­ழ­கங்கள், உயர்­கல்வி நிறு­வ­னங்கள் உள்­ளிட்ட சகல அரச நிறு­வ­னங்கள், பொது நிறு­வ­னங்கள் மற்றும் தனியார் நிறு­வ­னங்கள் அனைத்­தையும் மூடியும், போக்­கு­வ­ரத்துச் சேவை­களை நிறுத்­தியும் முழு­மை­யான இயல்பு நிலை தவிர்ப்பை கடைப்­பி­டிக்­கு­மாறு அக்­கட்சி கோரி­யுள்­ளயுள்ளது. அத்துடன் இப்­போ­ராட்­டத்­தின்­போது எவரும் வன்­மு­றையில் ஈடு­ப­டவோ, வன்­மு­றைக்கு இட­ம­ளிக்­கவோ கூடாது எனக் கோரு­வ­துடன், மருத்­துவ சேவைகள் போன்ற அத்­தி­யா­வ­சிய சேவைகள் பாதிக்­க­ப­டக்­கூ­டா­தென்­ப­துடன்இ பொது அமை­தியை பேணும் வகையில் அனை­வ­ரையும் செயற்­ப­டு­மாறும் வேண்­டு­வ­தாகவும் அக்­கட்சி மேலும் தெரி­வித்­துள்­ளது.


அர­சியல் கைதி­களின் விடு­த­லையை உட­ன­டி­யாக நிறை­வேற்­றக்­கோரி இலங்கை அர­சாங்­கத்­திற்கும், சர்­வ­தேச சமூ­கத்­துக்கும் உரத்துச் சொல்லும் வித­மாக இன்று வெள்ளிக்­கி­ழமை வடக்குஇ கிழக்கில் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்ள பொது வேலை­நி­றுத்தப் போராட்­டத்­திற்குஇ வடக்கு மாகா­ண­சபை பூரண ஆத­ரவை வழங்­கு­கின்­ற­தென வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார். பொது­வேலை நிறுத்தப் போராட்­டத்தின் போது மருத்­துவ சேவை போன்ற அத்­தி­யா­வ­சிய சேவைகள் பாதிக்­கப்­ப­டா­தி­ருப்­பதை உறு­தி­செய்ய வேண்டும் பொது அமை­திக்குப் பங்கம் ஏற்­ப­டா­த­வாறு கண்­ணியம் காக்­கப்­பட வேண்டும் என முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் மேலும் கேட்­டுக்­கொண்­டுள்ளார்.



கைதி­களின் விடு­த­லையை வலி­யு­றுத்தி இன்று முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்ள ஹர்த்­தா­லுக்கு ஈழ­மக்கள் ஜன­நா­யக கட்சி, தமிழர் விடு­தலைக் கூட்­டணி, அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் ஆகி­ய­னவும் தமது பூரண ஆத­ரவை தெரி­வித்­துள்­ளன.


ஆத­ரவு குறித்து ஈழ­மக்கள் ஜன­நா­யக கட்­சியின் செய­லாளர் நாய­கமும் யாழ்.மவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான டக்­ளஸ்­தே­வா­னந்தா கூறு­கையில், தமிழ் அர­சியல் கைதி­களின் விடு­த­லையை வலி­யு­றுத்­து­வ­தற்­கான தார்­மீக கடமை எனக்கு உள்­ளது. நானும் பொது­மன்­னிப்­பி­லுள்ள ஒரு நப­ராவேன். நீண்­ட­கா­ல­மா­கவே நான் இவர்­களின் விடு­த­லை­தொ­டர்­பாக குர­லெ­ழுப்பி வரு­கின்றேன். அந்த வகையில் அவர்­களின் விடு­தலை தொடர்பில் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்ள இந்த ஹர்த்­தா­லுக்கு நானும் எமது அமைப்­பி­னரும் பூரண ஆத­ரவை வழங்­கு­கின்றோம். எனினும் பொது மக்­களின் அத்­தி­யா­வ­சிய தேவைகள் பாதிக்­கப்­ப­டாது அமை­தியான முறையில் ஹர்த்தால் முன்­னெ­டுக்­கப்­பட்டு அர­சியல் நலன்­க­ளுக்கு அப்பால் தமிழ் அர­சியல் கைதி­களின் விடு­த­லைக்­கான அழுத்­த­ம­ளிக்­கப்­ப­ட­வேண்டும் என்றார்.


அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரிஷாட் பதி­யுதீன் கூறு­கையில்இ தமிழ் அர­சியல் கைதிகள் விடு­தலை செய்­யப்­ப­ட­வேண்­டு­மென நான் நீண்­ட­கா­ல­மா­கவே வலி­யு­றுத்தி வரு­கின்றேன். அண்­மையில் இவ்­வி­டயம் தொடர்பில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகி­யோ­ரிடம் கோரிக்கை முன்­வைத்­துள்ளேன். அதேபோன்று இன்றைய தினம் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையிலும் சகோதர இளைஞர்களின் துன்பதுயரங்களில் பங்கெடுக்கும் ஒரு நபர் என்ற அடிப்படையிலும் நானும் எனது கட்சியும் தொழிற்சங்கமும் அரசியல் பேதமின்றி பூரண ஆதரவை வழங்கவுள்ளோம். இவ்வாறான போராட்டங்கள் அரசியல் நலன்களுக்கு அப்பால் கருத்தொற்றுமை மிக்கதாக பாதிப்படைந்தோரின் குரலாக இடம்பெறவேண்டுமென்பதே எமது எதிர்பார்ப்பாகும் என்றார்.


இதேவேளை வடக்குஇ கிழக்கில் செயற்படும் ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளும், அரசியல் பிரமுகர்களும் தமது ஆதரவுகளை வௌியிட்டுள்ளன. இந்த ஹர்தாலை உணர்வு பூர்வமானதாகவும் அமைதியான முறையிலும் முன்னெடுக்குமாறு அனைத்து தரப்பினரிடமும் ஏற்பாட்டாளர்கள் கோரியுள்ளனர்.



இன்றைய தினம் ஹர்த்தால் மற்றும் கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் பொதுச்சொத்துக்கள், மற்றும் பொதுமக்களுக்கு இடையூறளிக்காது அவற்றை அமைதியான முறையில் மேற்கொள்ளுமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34