(எம்.மனோசித்ரா)
வெலிமட மற்றும் பேலியகொட பொலிஸ் பிரிவுகளில் ஏற்பட்ட திடீர் தீப்பரவலால் மூன்று சிறுவர்களும் , பெண்ணொருவரும் காயமடைந்துள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
வெலிமட
வெலிமட பொலிஸ் பிரிவில் கெப்பிட்டிபொல குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் ஏற்பட்ட திடீர் தீப்பரவலில் பெண்ணொருவரும் , இரு சிறுவர்களும் காயமடைந்து வெலிமட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மின் துண்டிப்பு காரணமாக குறித்த வீட்டார் ஜெனரேட்டர் இயந்திரத்தை இயக்க முயற்சித்துள்ளனர் எனினும், அது செயற்படாமையின் காரணமாக மெழுகுவர்த்தியை பற்ற வைத்துள்ளனர்.
இதன் போது மெழுகுவர்த்தி அருகில் இருந்த பெற்றோல் போத்தலொன்றின் மீது விழுந்தமையால் இவ்வாறு திடீர் தீப்பரவல் ஏற்பட்டதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பேலியகொட
பேலியகொட பொலிஸ் பிரிவில் தரமடுவத்த பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக குடியிருப்புக்களில் ஏற்பட்ட திடீர் தீப்பரவலால் 3 வீடுகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளன.
இதன்போது சிறுமியொருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த தீ விபத்திற்கான காரணம் குறித்து பேலியகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM