ஆலயங்களின் உண்டியல் உடைத்து பணம் திருடியவர் கைது - யாழில் சம்பவம்

30 Mar, 2022 | 01:02 PM
image

யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணையில் உள்ள பிரபல இரண்டு ஆலயங்களில் நேற்று இரவு உண்டியல் உடைத்து பணம் திருடியவர் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த திருட்டுச் சம்பவங்கள் நேற்றிரவு இடம்பெற்ற நிலையில் சந்தேக நபர் இன்று கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபரிடமிருந்து 60 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பணம் மற்றும் வெளிநாட்டு குற்றிகள் என்பனவும் கைப்பற்றப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் மணியந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவரே யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

ஆலயம் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமரா பதிவை வைத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right