யோர்க்ஷயர் அணியில் இணைகிறார் இலங்கை டெஸ்ட் அணித் தலைவர் திமுத் கருணாரட்ன

30 Mar, 2022 | 11:24 AM
image

இங்கிலாந்தில் விரைவில் ஆரம்பமாகவுள்ள நடப்பு கிரிக்கெட் பருவ காலத்திற்கான பிராந்திய (கவுன்டி) கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கு இலங்கை டெஸ்ட் அணித் தலைவர் திமுத் கருணாரட்னவை  யோர்க்ஷயர்   பிராந்திய அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

யோர்க்ஷயர் அணிக்காக நான்கு முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ள திமுத் கருணாரட்ன, மே மாதம் பங்களாதேஷுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இலங்கை அணியுடன் இணைந்துகொள்வார்.

இதற்கு அமைய க்ளொஸ்டர்ஷயர் (ஏப்ரல் 14 - 17), நொதம்ப்டன்ஷயர் (ஏப்ரல் 21- 24), லீட்ஸ் (ஏப்ரல் 28 - மே 1), இசெக்ஸ் (மே 5 - 8) ஆகிய அணிகளுக்கு எதிரான நான்கு போட்டிகளில் விளையாடிய பின்னர் இலங்கை அணியுடன் திமுத் கருணாரட்ன இணைவார்.

பங்களாதேஷுடான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முடிவடைந்ததும் திமுத் கருணாரட்ன, யோர்கஷயர் அணியில் மீண்டும் இணைந்துகொள்வார்.

76 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 5,620 ஓட்டங்களை மொத்தமாக பெற்றுள்ள திமுத் கருணாரட்ன டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான ஐசிசி தரவரிசையில் தற்போது 6ஆவது இடத்தில் இடம்பெறுகிறார்.

சர்வதேச கிரிக்கெட் விளையாட்டிலிருந்து ஓய்வுபெற்ற சுரங்க லக்மாலைத் தொடர்ந்து இங்கிலாந்தில் இந்த வருடம் பிராந்திய கிரிக்கெட் விளையாடவுள்ள இரண்டாவது இலங்கையர் திமுத் கருணாரட்ன ஆவார்.

சுரங்க லக்மாலை 2 வருடங்களுக்கு டார்பிஷயர்  பிராந்திய அணி ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இருபதுக்கு - 20 உலகக்கிண்ண கிரிக்கெட்...

2022-09-30 16:35:17
news-image

வீதி பாதுகாப்பு உலகத் தொடர் இறுதிப்...

2022-09-30 13:46:59
news-image

தென்னாபிரிக்காவை 8 விக்கெட்களால் வெற்றிகொண்டது இந்தியா

2022-09-29 13:41:18
news-image

கொழும்பில் திபப்பரே கால்பந்தாட்ட சுற்றுப் போட்டி...

2022-09-29 13:37:01
news-image

இங்கிலாந்தை 6 ஓட்டங்களால் வெற்றிகொண்டது பாகிஸ்தான்

2022-09-29 11:10:17
news-image

இந்தியா, பாகிஸ்தான் டெஸ்ட் தொடரை தமது...

2022-09-28 23:01:57
news-image

இருபதுக்கு - 20 ஆசியக் கிண்ண...

2022-09-28 15:00:27
news-image

17 வயதிற்குட்பட்டோருக்கான கிரிக்கெட் : கண்டி...

2022-09-28 15:21:58
news-image

வெளியிலிருந்து கல்லெறிய வேண்டாம் ; போட்டியிட்டு...

2022-09-28 10:36:28
news-image

தற்போதைய நிலை நீடித்தால் ஓரிரு நாட்களில்...

2022-09-27 22:19:57
news-image

7 இலங்கை அணி வீரர்கள் களமிறங்கவுள்ள ...

2022-09-27 16:50:35
news-image

மரதனில் சொந்த உலக சாதனையை கிப்சோகே...

2022-09-26 15:07:13