பொரளை தேவாலயத்தில் மீட்கப்பட்ட கைக்குண்டு இரசாயன பகுப்பாய்வுக்கு : சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு 

By T Yuwaraj

29 Mar, 2022 | 09:46 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

வெலிக்கடை சிறைச்சாலைக்கு அருகே, பொரளை  - ஆனந்த ராஜகருணா மாவத்தையில் அமைந்துள்ள சகல புனிதர்கள் தேவாலய வளாகத்தில் வைத்து மீட்கப்பட்ட  கைக்குண்டினை, அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பி அறிக்கை பெற நீதிமன்றம் இன்று ( 29) உத்தரவிட்டது.  கொழும்பு மேலதிக நீதிவான் ரஜீந்ரா ஜயசூரிய இதற்கான உத்தரவினைப் பிறப்பித்தார்.

பொரளை தேவாலய குண்டு விவகாரம் :கைதான வைத்தியர் 2 மணி நேரம் இரகசிய  வாக்குமூலம் | Virakesari.lk

 

இன்றைய தினம் இவ்வழக்கு கொழும்பு நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு வந்த போது, சம்பவம் தொடர்பில் விசாரிக்கும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர், கைக்குண்டினை மன்றில் சமர்ப்பித்து அரச இரசாயன பகுப்பாய்வாளரின் அறிக்கையைப் பெறும் கோரிக்கையை முன் வைத்தனர்.

அதனை ஏற்றே மேலதிக நீதிவான் ரஜீந்ரா ஜயசூரிய குறித்த உத்தரவை பிறப்பித்து வழக்கை எதிர்வரும் ஏப்ரல்  8 ஆம் திகதிவரை ஒத்தி வைத்தார்.

இந்த வழக்கில் லியனகே தயாசேன,  வைத்தியர் ஷேர்லி தயாநந்த ஹேரத் மற்றும்  ருவன்சிறி பிரேமசந்ர ஆகிய மூன்று சந்தேக நபர்கள்  சந்தேக நபர்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

 எனினும்  வைத்தியர் ஷேர்லி தன்னை பிணையில் விடுவிக்க உத்தரவிடுமாறு கோரி கொழும்பு மேல் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அம்மனுவை ஆராய்ந்து  அவருக்கு பிணையளிக்கப்பட்டுள்ளது. ஏனைய இருவரும் தொடர்ந்து விளக்கமறியலில் இருக்கும் நிலையில் அவர்களின் விலக்கமறியல் காலமும் 8 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right