ஸ்ரீ லங்கா எயார் லைன்ஸ் விமான சேவை நிறுவனம்  சம்சுங் நோட் 7 தொலைபேசியை பயணிகள் மற்றும் விமான பணியாளர்கள் ஸ்ரீ லங்கா எயார் லைன்ஸ் மற்றும் மிஹின் லங்கா விமானங்களுக்குள் கொண்டுசெல்ல  தடை விதித்துள்ளது.

 உடனடி அமுலுக்கு வரும் வகையில் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளாக ஸ்ரீ லங்கா எயார் லைன்ஸ் விமான சேவை நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்சுங் நோட் 7 தொலைபேசிகளில் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் பயணிகளின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.