கேரளா தலைநகர் திருவனந்தபுரத்தில் 4 வயது சிறுமி ஒருவர் 70 வயது ஓய்வு பெற்ற பேராசிரியரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கொடூர சம்பவம் நடந்துள்ளது. 

திருவனந்தபுரம் அருகே உள்ள நெடுமாங்காடு, வஞ்சுவம் பகுதியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற பேராசிரியர் முகமதுசாலி. 70 வயதான இவர் பக்கத்து வீட்டுடன் நல்ல நட்புடன் பழகி வந்துள்ளார். கடந்த சனிக்கிழமை பக்கத்து வீட்டில் உள்ள பெண் அவரது மூத்த மகளை பாடசாலையில் இருந்து அழைத்து வர சென்றுள்ளார்.

அப்போது அவரது 4 வயது பெண் குழந்தை வீட்டில் இருந்துள்ளது. இந்த நேரத்தில் அங்கு சென்ற பேராசிரியர் முகமதுசாலி அந்த 4 வயது சிறுமியை வீட்டின் முன்பக்கம் உள்ள கார் பார்க்கிங் பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக தெரிகிறது.

இதனையடுத்து பாடசாலையில் இருந்து திரும்பி வந்த தாயிடம் சிறுமி நடந்தவற்றை கூறியுள்ளார். இதனையடுத்து அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் பொலிஸார் முகமதுசாலியை கைது செய்தனர். முகமதுசாலி அங்குள்ள தனியார் கல்லூரியின் தொண்டு நிறுவனத்திலும் உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.