கல்கிசை பிரதேசத்தில் மசாஜ் நிலையமெனும் பேரில் இயங்கி வந்த இரண்டு விபசார விடுதிகளை சோதனைக்குட்படுத்தியதில் ஐந்து பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கல்கிசை பொலிஸ்பிரிவில்  காலி வீதியில் இயங்கி வந்த குறித்த விபசார விடுதிகளை சோதனையிட்ட குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் சந்தேக நபர்களான  பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட ஐந்து பெண்களும் 20 முதல் 40 வயதுக்கு இடைப்பட்ட மின்னேரியா, தெனியாய, மஹியங்கனை, பாதுக்க மற்றும் மன்னம்பிட்டிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.

மேலும், இச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை கல்கிசை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு  தெரிவித்துள்ளது.