ஆட்சி அதிகாரம் கிடைத்தால் 48 மணித்தியாலத்திற்குள் வரிசை யுகத்தை மாற்றுவோம் - ஐக்கிய தேசியக் கட்சி

29 Mar, 2022 | 09:04 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி ஆட்சிக்கு வந்தால் நாட்டில் ஏற்பட்டிருக்கும் வரிசை யுகத்தை 48மணி நேரத்தில் இல்லாமலாக்குவோம்.

அதற்கான நடவடிக்கைகளை எடுக்க முடியுமான அனுபவம் ரணில் விக்ரமசிங்கவுக்கு இருக்கின்றது என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஐக்கிய தேசிய கட்சிக்கு பாராளுமன்றத்தில் இருக்கும் ஒரு ஆசனம் ஜனாதிபதி, பிரதமருக்கு இணையான ஆசனமாகும். ஒரு ஆசனத்தை வைத்துக்கொண்டு ஐக்கிய தேசிய கட்சி எவ்வாறு ஆட்சியை கைப்பற்றப்போகின்றது என பலரும் எம்மிடம் கேட்டனர். 

என்றாலும் ஆசனம் முக்கியமில்லை, அதற்கான ஆளுமையும் அனுபவமுமே முக்கியம் என நாங்கள் அன்று தெரிவித்திருந்தோம், தற்போது அது உண்மையாகி வருகின்றது. 

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண ரணில் விக்ரமசிங்கவினால் மாத்திரமே முடியும் என்ற கருத்து வலுவாக அதிகரித்து வருகின்றது.

பாராளுமன்றத்தில் இருக்கும் 225பேரில் ரணில் விக்ரமசிங்கவுக்கே அதிக அரசியல் அனுபவமும் திறமையும் இருக்கின்றது. அதனால்தான் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்துக்கு செல்லவேண்டும் என நாங்கள் உறுதியாக இருந்தோம்.

அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்வதற்கு மக்கள் வரிசையில் இருக்கவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது. 

ஆனால் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் 48மணி நேரத்தில் வரிசை யுகத்தை இல்லாமலாக்குவோம் அதற்கான திறமை ரணில் விக்ரமசிங்கவுக்கு இருக்கின்றது. 

நாட்டின் இறையாண்மையை பாதுகாத்துக்கொண்டு சர்வதேசத்துடன் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக்கொள்ள முடியுமான ஒரு தலைவர் ரணில் விக்ரமசிங்க. 

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடுமாறு ரணில் விக்ரமசிங்கவே அரசாங்கத்துக்கு ஆரம்பமாக தெரிவித்திருந்தார். 

நாடு தொடர்பில் ஆரம்பமாக சர்வதேசத்துக்கு நம்பிக்கையை ஏற்படுத்தவேண்டும். 

இதுதொடர்பில் சர்வதேசத்துக்கு நம்பிக்கை எற்பட்டால், எமது நாடு தொடர்பில் சந்தேகம் ஏற்படப்போவதில்லை. 

இவ்வாறான பொருளாதார நெருக்கடிக்கு பயந்தே 2017இல் நடத்தவேண்டிய ஜனாதிபதி தேர்தலை 2015இல் நடத்தினார்கள். என்றாலும், அதில் நாங்கள் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தோம்.

பொருளாதார நெருக்கடிக்கு சர்வதேசத்தின் உதவியுடன் முகம்கொடுத்தோம்,மக்களுக்கு நிவாரணம் வழங்கினோம்,  எரிபொருள், காஸ் உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்தோம்  எமது அரசாங்கத்தின் மீது சர்வதேசத்துக்கு இருந்த நம்பிக்கையே இதற்கு காரணமாகும். என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17