பெல்மடுல்ல கிரிந்தி எல்லயில் நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு - சிறுவனின் 3 நண்பர்கள் கைது

Published By: Digital Desk 4

29 Mar, 2022 | 12:53 PM
image

பெல்மடுல்ல, பஹல அமுன, உடத்துல பிரதேசத்தில் உள்ள கிரிந்தி எல்ல பகுதியில் இருந்து 16 வயது சிறுவனின் சடலம் ஒன்று நேற்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Kirindi Ella waterfalls - Lanka Excursions Holidays - Kandy

இந்நிலையில், சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்யாத குறித்த சிறுவனுடன் சென்ற மூன்று பாடசாலை மாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது குறித்த சடலம் பெல்மடுல்ல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் 16 வயதுடைய மாணவனுடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.

குறித்த சிறுவன் கடந்த  சனிக்கிழமை (26) பெல்மடுல்ல லெலுப்பிட்டிக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மறுநாள் (27) அவர் வீடு திரும்பாததால், சிறுவனின் பெற்றோர் இரத்தினபுரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

சிறுவனின் சடலத்தை கண்டுபிடித்த பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட போது, குறித்த சிறுவன் மேலும் மூன்று நண்பர்களுடன் கிரிந்தி எல்ல நீர்வீழ்ச்சிக்கு குளிக்கச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில், குளித்துக் கொண்டிருந்த போது குறித்த சிறுவன்  நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்டவரின் நண்பர்கள் சம்பவம் குறித்து யாருக்கும் தெரிவிக்காமல் அப்பகுதியை விட்டு வெளியேறினர்.

நீரில் மூழ்கி இறந்ததை தெரிவிக்காததால், அப்பகுதியை விட்டு வெளியேறியதற்காக குறித்த  மூன்று நண்பர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதையடுத்து உயிரிழந்தவரின் சடலம் கஹவத்தை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பெல்மடுல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

2025-03-18 12:05:27
news-image

கடையின் சுவரை உடைத்து சேதப்படுத்திய காட்டு...

2025-03-18 11:58:03
news-image

மீன்பிடி அமைச்சால் கொண்டுவரவிருக்கும் கடற்றொழில் சட்டம்...

2025-03-18 11:57:48
news-image

நிலாவெளியில் வாகன விபத்து ; முச்சக்கரவண்டி...

2025-03-18 11:57:09
news-image

120 மில்லியன் ரூபாய் பெறுமதியான சிகரட்டுகள்...

2025-03-18 11:43:21
news-image

பாராளுமன்றம் பற்றி எழுதப்பட்ட இரண்டு நூல்கள்...

2025-03-18 11:56:33
news-image

“கணேமுல்ல சஞ்சீவ“ படுகொலை ; கைது...

2025-03-18 11:24:42
news-image

ஏப்ரல் மாதம் முதல் அதிகரிக்கப்படும் பால்மாவின்...

2025-03-18 11:20:29
news-image

ருவன்வெல்ல பகுதியில் கார் விபத்து ;...

2025-03-18 10:58:15
news-image

ஹட்டனில் மின்னல் தாக்கி மரம் முறிந்து...

2025-03-18 10:48:24
news-image

குஷ் போதைப்பொருளுடன் இந்திய தம்பதி கட்டுநாயக்கவில்...

2025-03-18 10:25:30
news-image

இலங்கையின் அபூர்வமான ‘யூனிகொர்ன்’ யானை சுட்டுக்...

2025-03-18 10:51:54