பேராதெனிய போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைகள் மீண்டும் ஆரம்பம்

Published By: Digital Desk 3

29 Mar, 2022 | 02:38 PM
image

மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக இடைநிறுத்தப்பட்ட சத்திர சிகிச்சைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பேராதெனிய போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் எச்.எம்.அர்ஜுன திலகரத்ன தெரிவித்துள்ளார்.

அவசர மற்றும் உயிர்காக்கும் சத்திரசிகிச்சைகளுக்குத் தேவையான அத்தியாவசிய மருத்துவப் பொருட்களை சேமிக்கும் நோக்கில் நேற்று (28) முதல் இந்த இடைநிறுத்தம் மேற்கொள்ளப்பட்டதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் எச்.எம்.அர்ஜுன திலகரத்ன தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்,  சத்திரசிகிச்சைகளை வழமை போன்று தொடர்வதற்கு உரிய மருந்துகள் மற்றும் ஏனைய பொருட்களை வழங்குவதாக மருத்து விநியோகப் பிரிவினால் எமக்கு அறிவித்தல் கிடைத்துள்ளது.

அதன்படி, பற்றாக்குறை நிவர்த்திசெய்யப்பட்டு வருகிறது மற்றும் அனைத்து அறுவை சிகிச்சைகளும் இன்று மீண்டும்  ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர் திலகரத்ன தெரிவித்துள்ளார்.

பேராதனை போதானா வைத்தியசாலையில் திட்டமிடப்பட்ட சத்திரசிகிச்சைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட செய்தியை அறிந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் இவ்விடயத்தில் இந்தியா எவ்வாறு உதவலாம் என்பது குறித்து கலந்துரையாடுமாறு இந்திய உயர் ஸ்தானிகர் பாக்லேவை கேட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51