அயலக கொள்கையில் இலங்கைக்கு என்றும் முதலிடம் - இந்திய வெளிவிவகார அமைச்சர்

Published By: Digital Desk 3

29 Mar, 2022 | 08:57 AM
image

(இராஜதுரை ஹஷான்)

'அயலகத்திற்கு முதலிடம் 'கொள்கைக்கமைய இந்தியா இலங்கையுடன் தொடர்ந்து செயற்படும் என இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவிற்கு உறுதியளித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெறும்  5ஆவது பல்துறை தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார கூட்டுறவிற்கான வங்காள விரிகுடா முன்னெடுப்பு (பிம்ஸ்டெக்) மாநாட்டில் கலந்துக்கொள்ள இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கரிற்கும்,நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்றைய தினம் இடம்பெற்றது.

இலங்கையின் பொருளாதார நிலைமை மற்றும் இந்தியாவின் முன்னேற்றகரமான ஒத்துழைப்பு குறித்து இச்சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

எதிர்வரும் காலங்களில் இந்தியாவிடமிருந்து இலங்கை உதவிகளை பெற்றுக்கொள்வது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

'அயலகத்திற்கு முதலிடம் 'என்ற கொள்கைக்கமைய இந்தியா இலங்கையுடன் தொடர்ந்து செயற்படும் என இந்திய வெளியுறவு துறை அமைச்சர் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவிடம் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு தேவையான அத்தியாவசிய உணவு பொருட்கள்,மருந்து பொருட்கள் ஆகியவற்றை  இறக்குமதி செய்வதற்காக இந்தியா 'அயலகத்திற்கு முதலிடம் 'கொள்கைக்கமைய இம்மாதம் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு நகரில் உள்ள  லங்கா ஐ.ஓ.சி. எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் நேற்றைய தினம் விஜயம் மேற்கொண்டார். இவ்விஜயத்தில் லங்கா ஐ.ஓ.சி.நிறுவன  முகாமைத்துவ பணிப்பாளர் மனோஜ் குப்தா ஒன்றிணைந்திருந்தார்.

'500 மில்லியன் அமெரிக்க டொலர் இந்திய கடனுதவி இலங்கை மக்களின் அன்றாட வாழ்விற்கு உதவுகின்றது 'என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்த மண்ணில் தமிழரசுக்கட்சியினால்தான் தமிழ் மக்கள்...

2024-10-14 02:23:21
news-image

யாழ். தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் தமிழரசு...

2024-10-14 02:07:52
news-image

முக்கியமான தீர்மானங்களின் போது நபர்கள் தொடர்பில்...

2024-10-14 01:58:57
news-image

கொழும்பில் பிரபல வர்த்தகர் ரணில் விலத்தரகே...

2024-10-14 01:41:54
news-image

தேர்தல் செலவு அறிக்கையை கையளிக்காத ஜனாதிபதி...

2024-10-13 23:39:33
news-image

தேர்தலில் போலித் தமிழ்த்தேசியவாதிகளையும் போதை வியாபாரிகளையும்...

2024-10-13 19:23:46
news-image

கொடிகாமத்தில் குண்டு வெடிப்பு; இளைஞன் படுகாயம்

2024-10-13 19:17:35
news-image

சீரற்ற காலநிலை – கொழும்பு கம்பஹா...

2024-10-13 18:48:40
news-image

களுவாஞ்சிக்குடியில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதியதில்...

2024-10-13 18:37:55
news-image

அம்பாறையில் தமிழ் மக்களின் வாக்கினை சிதைக்க...

2024-10-13 18:58:57
news-image

ஆட்சியமைக்கின்ற அரசாங்கத்துடன் பேரம் பேசி செயற்படுவோம்...

2024-10-13 18:19:20
news-image

வெள்ளம் சூழ்ந்த பகுதியை பார்வையிடச் சென்றவர்...

2024-10-13 18:31:19