மொஸ்கோவிற்கான விமான சேவைகள் மறுஅறிவித்தல் வரை இடைநிறுத்தம்

Published By: Digital Desk 4

28 Mar, 2022 | 09:15 PM
image

(எம்.மனோசித்ரா)

இலங்கை மற்றும் ரஷ்யாவின் மொஸ்கோ வரையான விமான போக்குவரத்து சேவையினை திங்கட்கிழமை (28) முதல் இடைநிறுத்துவதாக ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இலங்கை - நெதர்லாந்துக்கிடையில் விமான சேவை | Virakesari.lk

ரஷ்யா - உக்ரைன் யுத்தம் காரணமாக ரஷ்யா மீதான விமானக் காப்புறுதி கட்டுப்பாடுகள் மற்றும் சர்வதேச நிதிக் கட்டுப்பாடுகள் தமது நிறுவனத்தில் நேரடிப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

அதற்கமையவே மறு அறிவித்தல் வரை மொஸ்கோவிற்கான விமான சேவைகளை இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த முடிவினால் பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு விமான நிறுவனம் கவலை வெளியிட்டுள்ளது.

ரஷ்யாவின் நிலைமையை அவதானித்து வருவதாகவும், நிலைமை சீரடைந்தவுடன் மீண்டும் செயற்பாடுகளை ஆரம்பிக்க முடியும் என நம்புவதாகவும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

இவ்வாறு ஸ்ரீலங்கன் விமான சேவை இடைநிறுத்தப்படுவதற்கு முன்னர் கொழும்பிற்கும் மொஸ்கோவிற்கும் இடையில் வாராந்தம் இரண்டு விமான சேவைகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தியத்தலாவ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7ஆக...

2024-04-21 18:18:05
news-image

நாட்டை கட்டியெழுப்புகையில் யாரையும் கடந்து செல்லவோ...

2024-04-21 17:41:42
news-image

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு தலா...

2024-04-21 17:38:24
news-image

தியத்தலாவ விபத்தில் ஐவர் பலி, 21...

2024-04-21 16:12:10
news-image

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இலவச...

2024-04-21 15:59:18
news-image

உயிர்த்த ஞாயிறு படுகொலைகளிற்கு யார் காரணம்...

2024-04-21 16:08:07
news-image

நாடளாவிய ரீதியில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள...

2024-04-21 17:06:14
news-image

மட்டு. சீயோன் தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு...

2024-04-21 15:33:13
news-image

குளவி தாக்குதலுக்கு இலக்காகி ஆறு தோட்டத்தொழிலாளர்கள்...

2024-04-21 16:27:04
news-image

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பின் சூத்திரதாரிகளை கைது...

2024-04-21 15:05:37
news-image

சம்மாந்துறை விபத்தில் இரு மாடுகள் உயிரிழந்தன!

2024-04-21 15:38:53
news-image

சம்பள உயர்வு கோரி பெருந்திரளான தொழிலாளர்களுடன் ...

2024-04-21 14:51:39