(இராஜதுரை ஹஷான்)
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதமர் பதவியை வழங்குமளவிற்கு பொதுஜன பெரமுன வங்குரோத்து நிலையினை அடையவில்லை.
அரசாங்கத்தின் பெரும்பான்மையினை முடிந்தால் சிதறடித்துக் காட்டுங்கள் என முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதயகம்மன்பில ஆகியோரிடம் சவால் விடுத்துள்ளேன் என துறைமுகம் மற்றும் கப்பற்துறை அபிவிருத்தி அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
வெளிநாட்டு கையிருப்பு வரையறுக்கப்பட்டதை தொடர்ந்து எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.
எரிபொருள் பற்றாக்குறை பிரச்சினைக்கு தீர்வுகாண அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. 37500 மெற்றிக்தொன் எரிபொருள் தரையிறக்கப்பட்டுள்ளது.
வழமையான நாட்களை காட்டிலும் தற்போது எரிபொருள் அதிகளவு இறக்குமதி செய்யப்பட்டு சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் வாரமளவில் எரிபொருள் பற்றாக்குறை பிரச்சினைக்கு சிறந்த தீர்வை பெற்றுக்கொடுக்க முடியும்.
2015 ஆம் ஆண்டு அரசியல் சூழ்ச்சியின் ஊடாக ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியவர்கள் தற்போது மீண்டும் ஒன்றிணைந்துள்ளார்கள்.
கொவிட் தாக்கத்தினால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்கிறோம். நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் இவ்வாறான பிரச்சினைகள் ஏதும் தோற்றம் பெறவில்லை.
நல்லாட்சி அரசாங்கம் மக்களாணைக்கு மதிப்பளித்து செயற்பட்டிருந்தால் மக்கள் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தியிருக்க மாட்டார்கள்.
நடைமுறையில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டிய தேவை கிடையாது என்பதை பெரும்பாலான மக்கள் நன்கு அறிவார்கள்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் ஒன்றிணைந்து தேசிய அரசாங்கத்தை அமைக்கவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்தி அடிப்படையற்றது.
அரசியல் ரீதியில் பலமிக்க ஐக்கிய தேசிய கட்சியை முழுமையாக இல்லாதொழித்து, கட்சியின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ள முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதமர் பதவியை வழங்கும் அளவிற்கு பொதுஜன பெரமுன வங்குரோத்து நிலைமையினை அடையவில்லை.
அரசாங்கத்துடன் இணக்கமாக இருந்துகொண்டு அரசாங்கத்திலிருந்து வெளியேறிய முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதயகம்மன்பில ஆகியோர் அரசாங்கத்தின் பெரும்பான்மையை சிதறடிப்பதாக குறிப்பிட்டுக்கொள்கிறார்கள். முடிந்தால் அரசாங்கத்தின் பெரும்பான்மையை சிதறடியுங்கள் என சவால் விடுத்துள்ளேன்.
நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ திறமையானவர் 20 மணித்தியாலங்களும் செயற்பட கூடியவர் என்பதால் இவர்கள் அவர் மீது பொறாமை கொண்டு தவறான விமர்சனங்களை முன்வைக்கிறார்கள்.நடைமுறையில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு வெகுவிரைவில் தீர்வு காண்போம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM