மாறா வன்மம் மாறுமா?

28 Mar, 2022 | 12:22 PM
image

(கபில்)

“தமிழர்களைப் பொறுத்தவரையில் பொருளாதாரத் தடை ஒரு பொருட்டும் அல்ல. அதற்குள் வாழுவது கடினமும் அல்ல. ஆனால் சிங்கள மக்கள் வீதியில் இறங்கிப் போராடுகிறார்கள்”

“பிரபாகரனின் செவ்வியில் கூறப்பட்டுள்ளது போல சந்தோசமாக பிரிந்து செல்வதா, சம்பந்தன் குறிப்பிட்டது போன்று தமிழரின் இறைமையை அங்கீகரிக்கும் அதிகாரப் பகிர்வை உறுதி செய்வதா என்ற இணக்கமான நிலைக்கு சிங்கள மக்களும் அரசாங்கமும் முதலில் தயாராக வேண்டும்”

2000 ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன், செவ்வி ஒன்றில் வெளியிட்ட கருத்தின் ஒரு சிறுதுண்டு காணொளி அண்மையில் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

“தங்களுக்கு சம்பந்தமேயில்லாத இடங்களில் வந்து அவர்கள் வீணாகச் சண்டை பிடித்துக் கொண்டிருக்கிறார்கள் இதனால், இரண்டு தரப்பினருக்கும் தான் அழிவு. 

இரண்டு பேருமே சந்தோசமாக பிரிந்து போனால், இருவருமே நன்றாக இருக்கலாம். 

சிங்கள மக்களுக்கு நான் எதிரியல்ல. அவர்கள் மீது கோபமும் இல்லை. அவர்களின் தவறால் அழிவுகள் தொடருகின்றன” என்பதே அந்தச் செவ்வியின் மையக் கருத்து.

போர் முடிந்து 13 ஆண்டுகளாகி விட்டன ஆனால், அப்போது இருந்த பிரச்சினைகள் இப்போதும் உள்ளன.

சிங்கள மக்கள் மாறவில்லை. அரசாங்கங்களும் தமது பிடிவாதப்போக்கில் இருந்து மாறவில்லை. 

போர் இல்லாவிட்டாலும், இனவாதம் நாட்டை சீரழித்துக் கொண்டிருக்கிறது. தமிழருக்கு எதிரான வன்மமும், குரோதமும் தொடருகின்ற நிலையில், நாடு இன்றைக்கும் சீரழிந்து கொண்டிருக்கிறது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த புதன்கிழமை கூட்டிய சர்வகட்சி கூட்டத்தில் இரா.சம்பந்தன் உரையாற்றிய போது, “30 வருடங்களாக நீடித்த உள்நாட்டுப் போர் நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்தப் போர் ஒரு தீவிர சமூகப் பிரச்சினையால் ஏற்பட்டது. ஒரு சமூகத்தின் இறைமை பற்றிய பிரச்சினை அது. 

அந்த பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை. 

இவ்வாறான நிலையில் நாட்டில் உள்ள ஏனைய பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீர்வு காண முடியும்?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

வடக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் இறைமையை உறுதிப்படுத்தும் வகையில் அதிகாரப்பகிர்வு தேவை என்றும்,  தமிழ் மக்களுக்கு நீதியும் சமத்துவமும் கிடைக்க வேண்டும் என்றும் அதன் மூலமே பொருளாதாரப் பிரச்சினை உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்க முடியும் என்றும் அவர் வலியுறுத்தியிருக்கிறார்.

தமிழ் மக்களுடன் இணங்கி வாழும் சூழலை ஏற்படுத்தி, அவர்களின் பிரச்சினையை தீர்த்து, அமைதியான நாட்டைக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான மறுசீரமைப்புகள் மாற்றங்களுக்கு சிங்கள மக்களும், அரசாங்கமும் தயாராக இல்லாத வரை, பொருளாதாரப் பிரச்சினையை தீர்க்க முடியாது என்பதே அவரது நிலைப்பாடு.

போருக்காக – தமிழர்களை அழிப்பதற்காக, வளங்களைக் கொட்டத் தொடங்கியதன் விளைவு தான், நாடு இன்று அதல பாதாளத்தில் விழுந்து கிடக்கிறது.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2022-03-27#page-1

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://mypaper.lk/

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

படைக்குள் உருவாகும் குழப்பம்

2023-12-10 22:59:03
news-image

பிரித்தானியாவின் பதில் என்ன?

2023-12-10 23:00:23
news-image

கடைசி மூச்சை இழுத்து கொண்­டி­ருக்­கி­றது இஸ்ரேல்

2023-12-10 23:17:37
news-image

ஒல்­லாந்தில் இஸ்­லா­மிய வெறுப்­பா­ளரின் தேர்தல் வெற்றி:...

2023-12-10 23:19:27
news-image

அதிர்வுகளை ஏற்படுத்தப்போகும் தலைமைத்துவ போட்டி

2023-12-10 23:19:47
news-image

ஹென்றி கீசிங்கரும் வரலாற்றில் அவரின் வகிபாகமும்

2023-12-10 23:07:09
news-image

அரசியல்வாதிகளின் கடின பணியும் சுற்றியுள்ள கூட்டத்தின்...

2023-12-10 23:06:56
news-image

மறந்து போனதா பாடங்கள்?

2023-12-10 23:05:12
news-image

தாயகம் திரும்பியோர் மீண்டும் இலங்கைக்கு வருவது...

2023-12-10 23:05:24
news-image

பூகோள தட்ப வெபப அரசியல்

2023-12-10 18:41:05
news-image

துபாய் காலநிலை மாற்ற மாநாடு உலகின்...

2023-12-10 18:38:25
news-image

வரி செலுத்­துவோர் அடை­யாள எண்

2023-12-10 18:38:50