அரசைப் பிணையெடுக்கும் சந்திப்பா?

28 Mar, 2022 | 12:23 PM
image

(கபில்)

“தமிழர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் அரசாங்கம் அக்கறை கொள்ளாவிடினும், அத்தகைய அக்கறையை கொண்டுள்ளது போல சர்வதேசத்துக்கு “படம்” காட்டுவதில் உறுதியாக இருக்கிறது”

பொருளாதார நெருக்கடியை தீர்க்க முடியாத சிக்கல், கோட்டா வீட்டுக்குப் போ என முழங்கும் எதிர்க்கட்சிகளின் தொந்தரவு, அரசின் பெரும்பான்மை பலத்தை இல்லாமல் செய்வோம் என்ற பங்காளிக் கட்சிகளின் எச்சரிக்கை எனப் பலமுனைச் சிக்கல்களால் சூழ்ந்திருக்கின்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஒருவழியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தனது பதவிக்காலத்தில் கிட்டத்தட்ட பாதிக் கட்டத்தை அடைந்து விட்டார்.

இப்போது தான் அவர் முதல்முறையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்தித்திருக்கிறார்.

ஏற்கனவே, கடந்த ஆண்டு நடுப்பகுதியில் ஒருமுறையும், கடந்த 15ஆம் திகதி ஒருமுறையும், கூட்டமைப்புடன் சந்திப்புக்கு நாள் குறிக்கப்பட்டு, கடைசி நேரத்தில் அவை இரத்துச் செய்யப்பட்டன.

முதல் சந்திப்பு ரத்துச் செய்யப்பட்டதற்கு எந்தக் காரணமும் கூறப்படவில்லை. இரண்டாவது சந்திப்பு இரத்தானதற்கு எதிர்க்கட்சியின் பேரணி காரணமாக சொல்லப்பட்டது.

எவ்வாறாயினும், மூன்றாவது சந்திப்பு ஏற்பாடு, ஒருவழியாக நடந்தேறியிருக்கிறது, இதற்கு முன்னர் ஆட்சியில் இருந்த தலைவர்கள் பலர் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கிறார்கள்.

போர் நெருக்கடி, ஜே.வி.பி. கிளர்ச்சி நெருக்கடி, அரசியல் நெருக்கடி என பல்வேறு நெருக்கடிகளை ஒன்றாகவும், தனித்தனியாகவும், எதிர்கொண்ட தலைவர்களை விட, கோட்டாபய ராஜபக்ஷவுக்கு உள்ள நெருக்கடிகள் அதிகம்.

அவருக்கு உள்நாட்டு பொருளாதார நெருக்கடி, கடன் நெருக்கடி, சர்வதேச நெருக்கடி, அரசியல் நெருக்கடி என்று ஒரே நேரத்தில் அவரது காலைச் சுற்றி இறுக்கும் பல்வேறு நெருக்கடிகள் தோன்றியிருக்கின்றன.

இந்த நிலையில் இருந்து வெளியேறுவதற்கு, பழைய நண்பர்கள் முரண்டுபிடிக்கின்றனர். அதனால் அவருக்கு இப்போது புதிய நண்பர்கள் தேவைப்படுகிறார்கள்.

சகவாசமே வேண்டாம் என்று ஒதுக்கி வைத்தவர்களை தேடி ஓடுகின்ற நிலை அவருக்கு ஏற்பட்டிருக்கிறது.

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடப் போவதில்லை என்று ‘நாண்டு’ பிடித்துக் கொண்டிருந்த ஜனாதிபதியும் அரசாங்கமும், இப்போது வேறு வழியின்றி அதன் உதவியை நாடுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது.

அதுபோலத் தான், கூட்டமைப்பை ‘அண்டாமல்’ இருக்கும் இறுக்கமான நிலைப்பாட்டில் இருந்த ஜனதிபதி, இப்போது வேறுவழியின்றி கூட்டமைப்பை சந்தித்து பேசியிருக்கிறார்.

இவையெல்லாம் பிரச்சினைகளில் இருந்து வெளியேறுவதற்கும், நெருக்கடிகளில் இருந்து தப்பிப்பதற்கும், கையாளப்படுகின்ற உத்திகள்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தமிழர்களின் பிரச்சினையைக் கேட்டறிந்து, அவர்களையும் அரவணைத்துச் செல்லும் மனப்பாங்கைக் கொண்டிருந்தவர் என்றால், தனது பதவிக்காலத்தின் நடுப்பகுதியை எட்டும் வரை – அதுபற்றியே சிந்திக்காமல் இருந்திருக்கமாட்டார்.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2022-03-27#page-1

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://mypaper.lk/

முக்கிய செய்திகள்

icon-left
icon-right