இந்தியாவில் திருச்சூர் அருகே விளையாடிய போது தொண்டையில் பந்து சிக்கி 11 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
கேரள மாநிலம், திருச்சூர் அருகே உள்ள இரிஞ்ஞாலகுடா பகுதியில் வசித்த தந்தையொருவர் வெளிநாட்டிலிருந்து தனது குழந்தையை பார்க்க விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார்.
அப்போது அவர் குழந்தைக்கு ஏராளமான விளையாட்டு பொருட்களை வாங்கி வந்துள்ளார். பின்னர் அவர் விடுமுறை முடிந்து கடந்த வாரத்தில் வெளிநாடு சென்றுள்ளார்.
இந்நிலையில் குழந்தை வீட்டில் இருந்த சிறிய அளவிலான ரப்பர் பந்தை எடுத்து விளையாடிக்கொண்டு இருந்துள்ளது. அப்போது அதை அந்த குழந்தை விழுங்கியுள்ளது.
இதனால் அந்த பந்து குழந்தையின் தொண்டையில் சிக்கியதால், மூச்சுவிட முடியாமல் குழந்தை மயங்கியுள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த குழந்தையின் தாய் தனது குழந்தையை தூக்கிக்கொண்டு அருகில் உள்ள வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளர்.
உடனே வைத்தியர்கள் தொண்டையில் சிக்கிய பந்தை எடுக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் அதற்குள் அந்த குழந்தை மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
இது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM