கடல் கடந்து செல்லும் அகதிகளும்  சொந்த நாட்டின் அகதிகளும்

28 Mar, 2022 | 12:48 PM
image

(சிவலிங்கம் சிவகுமாரன்)

"பொருளாதார நெருக்கடி காரணமாக இந்தியாவுக்கு படகுகள் மூலம் அகதிகளாக சென்றமை மட்டுமே  ஊடகங்களில் பெரிதாக காட்டப்படுகின்றது ஆனால், பொருளாதார நெருக்கடிகளால் தலைநகரிலிருந்து பெரும்பாலான இளைஞர், யுவதிகள் தமது சொந்த இடங்களுக்கு வந்து கொண்டிருப்பதை எவரும் கண்டு கொள்வதாக இல்லை"

யுத்த காலத்தில் ஆயிரக்கணக்கில் மக்கள் அகதிகளாக தமிழகத்துக்கு இடம்பெயர்ந்து சென்றதை ஒரு போர்க்கால சம்பவமாகவே அனைவரும் பார்க்க வேண்டியிருந்தது. 

ஆனால் இப்போது பஞ்சம் காரணமாக முதன் முறையாக குடும்பங்கள் அகதிகளாக தமிழகத்துக்கு படகுகள் மூலமாக செல்லத்தொடங்கியுள்ளனர். 

இச்சம்பவம்  இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிகளை இந்தியா உட்பட பல நாடுகளுக்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளதுடன் இலங்கைக்கு பல வழிகளில் சங்கடங்களையும் ஏற்படுத்தியுள்ளது எனலாம்.

தமிழக ஊடகங்களும் ராஜபக்ஷக்களின் ஆட்சி இவ்வளவு கொடுமையானதா என வெறும் வாய்க்கு அவல் கிடைத்தது போன்று தமிழகம் சென்ற அகதிகளிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டு செய்திகளை ஒலி/ஒளிபரப்பி வருகின்றன.

யுத்த காலகட்டங்களில்  ராஜபக்ஷகளின் ஆட்சி பகுதிகளிலேயே  அதிகமான தமிழ் மக்கள் அகதிகளாகி தமிழகத்துக்கு படகுகள் மூலம் சென்றடைந்தனர்.

யுத்தம் முடிந்த பிறகும் கூட அவர்களின் ஆட்சியில் இவ்வாறு அகதிகள் தமிழகத்துக்கு செல்வதற்கு ஆரம்பித்துள்ளமை மனித உரிமை விவகாரங்களில் இலங்கைக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் சம்பவங்களாக இருக்கப்போகின்றன.

மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் பகுதிகளிலிருந்து கடந்த வாரம் படகுகள் மூலம் தனுஷ்கோடி கடற்பகுதிக்கு  10 பேர் வரை அகதிகளாக சென்றடைந்துள்ளனர். 

இதில் மூன்று சிறுவர்கள்  உட்பட நான்கு மாத கைக்குழந்தையும் அடங்குகின்றனர். 

இவர்களைத் தவிர்த்து ஏனைய அனைவருக்கும் எதிராக உரிய ஆவணங்களின்றி சட்டவிரோதமாக இந்திய கடற்பரப்புக்கள் நுழைந்தமையை காரணங்காட்டி இராமேஸ்வரம் நீதிமன்றில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

தமது பிள்ளைகளின் உயிர்களை சரி காப்பாற்ற வேண்டும் என்ற காரணத்தினாலேயே தாம் உயிரை பணயம் வைத்து படகுகள் மூலம் வந்ததாக அந்த 10 பேரும் தெரிவிக்கின்றனர். 

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2022-03-27#page-6

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://mypaper.lk/

முக்கிய செய்திகள்

icon-left
icon-right