இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தமிழ் தரப்பு பிரதிநிதிகளை சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
அதன்படி தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் இந்திய வெளிவிவகார அமைச்சர் தனது இலங்கை விஜயத்தின் போது சந்திக்கவுள்ளார்.
இன்று திங்கட்கிழமை மாலை 4.30 மணிக்கு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பிரதிநிதிகளை இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.
இந்திய இல்லத்தில் நடைபெறவுள்ள இந்த சந்திப்பில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் அதன் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.
இதன்போது தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு, புதிய அரசியல் அமைப்பு உருவாக்க செயற்பாடு, 13 ஆவது திருத்தச்சட்ட அமுலாக்கம், வடக்கு மீனவர் விவகாரம், வடக்கு, கிழக்கு அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சருடன் பேசப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இது இவ்வாறிருக்க, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதிநிதிகளையும் இந்திய வெளிவிவகார அமைச்சர் இன்று சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.
இதன்போது பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் தமிழ் முற்போக்குக் கூட்டணி தயாரித்துள்ள ஆவணம் குறித்தும் ஆராயப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM