காத்தான்குடி - மஞ்சந்தொடுவாய் எல்லை பகுதி பிரதான வீதியில் துவிச்சக்கரவண்டியும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்தனர்.

இன்று காலையில் இடம்பெற்ற இவ்விபத்தில் குறித்த இரு வாகனங்களை செலுத்தி சென்றவர்களே காயங்களுக்குள்ளாகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த காத்தான்குடி போக்குவரத்து பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

-அப்துல் கையூம்