நாட்டில் பல்வேறு பகுதிகளில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்துக்களில் நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கதிர்காமம்

கதிர்காமம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ரஜ மாவத்தை பிரதேசத்தில் மோட்டார்சைக்கிள் ஒன்று கனரக வாகனத்துடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன் போது பலத்த காயமடைந்த மோட்டார்சைக்கிள் செலுத்திய நபர் கதிர்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் 33 வயதுடைய அக்மீமன பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் இவர்கள் இருவரின் கவனயீனம் விபத்து காரணம் என்றும் கதிர்காமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தியத்தலாவ

தியத்தலாவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தியத்தலாவ-பண்டாரவெல பிரதான வீதியின் தியத்தலாவை நோக்கி பயணித்து கொண்டிருந்த மோட்டார்சைக்கிள் ஒன்று ஆம்பியுலன்ஸ் வண்டியுடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. 

இதன் போது பலத்த காயமடைந்த மோட்டார்சைக்கிள் செலுத்திய நபர் தியத்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் 17 வயதுடைய லுனுவத்த, ஊவா பரணகம பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் மோட்டார்சைக்கிள் செலுத்திய நபரின் கவனயீனம் விபத்து காரணம் என்றும் தியதலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அவிசாவெல்ல

அவிசாவெல்ல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அவிசாவெல்ல- இரத்தினபுரி பிரதான வீதியின் கெடஹெத்த பிரதேசத்தில் அவிசாவெல்ல நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார்சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

காயமடைந்த நபர் அவிசாவெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் 32 வயதுடைய லெல்லுபிடிய, இரத்தினபுரி பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் மோட்டார்சைக்கிள் செலுத்திய நபரின் கவனயீனம் விபத்து காரணம் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் அவிசாவெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

ஹசலக்க

ஹசலக்க பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கண்டி-மஹியங்கனை பிரதான வீதியின் மஹியங்கணையில் இருந்து ஹசலக்க நோக்கி பயணித்து கொண்டிருந்த உழவு இயந்திரம் ஒன்றுடன் மோட்டார்சைக்கிள் ஒன்று மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன் போது பலத்த காயமடைந்த மோட்டார்சைக்கிள் செலுத்திய நபர் ஹசலக்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

இவ்வாறு உயிரிழந்தவர் 60 வயதுடைய அம்பஹபெலஸ்ஸ பகுதியை சேர்ந்தவர் என்றும் சம்பவம் தொடர்பில் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹசலக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.