நெருங்கும் பண்டிகைக் காலம் : பலகாரங்களின் விலைகள் சடுதியாக அதிகரிப்பு ! 

27 Mar, 2022 | 12:43 PM
image

( எம்.எப்.ம்.பஸீர்)

பண்டிகைக் காலம் நெருங்கும் நிலையில், பலகாரங்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக பலகார உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.  

மூலப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக இம்முறை பண்டிகைக் காலத்தில், பழைய விலையில் பலகாரங்களை வழங்கக முடியாது எனவும் புதிய விலைகளின் அடிப்படையிலேயே இம்முறை ஆடர்கள் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும்  உற்பத்தியளர்கள் தெரிவிக்கின்றனர். 

பலகார உற்பத்திக்கான அரிசி, சீனி, பயறு, தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட மூலப் பொருட்களின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள உற்பத்தியாளர்கள், பலகாரத்தின் விலையை அதிகரித்துள்ளதாக கூறினர்.

 அதன்படி  15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பலகாரம் குறைந்த பட்சம் 30 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.  

25 ரூபாவாக விற்கப்படும் கொண்டை பலகாரம்  ரூ.50 இற்கும், 35  முதல் 40 ரூபாவை விற்பனைச் செய்யப்பட்ட பயிற்றம் பலகாரம்  55 ரூபாவுக்கும்,  30 ரூபா வரை விற்கப்பட்ட தேன் குழல் 40 முதல் 50  ரூபாவுக்கும்,  15 ரூபாவுக்கு விற்கப்பட்ட கொக்கிஸ் 30 ரூபாவுக்கும்,  60 ரூபாவாக இருந்த ஆஸ்மி 100 ரூபாவுக்கும்  விற்கும் வண்ணம்  விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

 எவ்வாறாயினும் இந்த விலையானது குறைந்த பட்ச விலையதிகரிப்பு என சுட்டிக்காட்டும் பலகார உற்பத்தியாளர்கள்,  பண்டிகை நெருங்கும் போது இவ்விலைகள் மேலும் அதிகரிக்கலாம் எனவும் குறிப்பிட்டனர். 

இதனை விட தற்போதும் தொதல் ஒரு கிலோவின் விலை 700 ரூபா முதல் 1000 ரூபா வரை உயர்ந்துள்ளது.

 இந் நிலையில் இம்முறை பண்டிகைக் காலத்தில் பலகாரங்களுக்கான கேள்வி விலை அதிகரிப்பு காரணமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக பலகார உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:49:05
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47