காணி அபகரிப்புக்கள் தொடர்பில் இராணுவத்தளபதி - சுமந்திரன் பேச்சு

27 Mar, 2022 | 10:34 AM
image

(ஆர்.ராம்)

வடக்கு,  கிழக்கில் படையினரால் காணிகள் அபகரிக்கப்படுதல் நிறுத்தப்பட வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடனான சந்திப்பின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியிருந்தது.

இதனையடுத்து இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனுடன் தொலைபேசி ஊடாக உரையாடியுள்ளார்.

இதன்போது, ஜனாதிபதியிடத்தில் படையினர் காணிகளை அபகரிப்பதாக கூறியிருக்கின்றீர்கள்.

படையினர் காணிகளை அபகரிக்கவில்லை என்ற தொனிப்பட இராணுவத்தளதி சவேந்திர சில்வா கூறியிருக்கின்றார்.

எனினும், சுமந்திரன் எம்.பி., வடக்கிலும் கிழக்கிலும் படையினரால் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ள சில இடங்களையும் அபகரிக்க முயன்றபோது பொதுமக்கள் எதிர்ப்பின் காரணமாக நிறுத்தப்பட்ட நிகழ்வுகளையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன்பின்னர், அபகரிக்கப்பட்ட காணிகளின் தகவல்களையும் தரவுகளையும் வழங்குமாறு இராணுவத்தளபதி சுமந்திரனிடத்தில் கோரியுள்ளார். 

எனினும், தன்னிடத்தில் யாழ்.மாவட்டத்தின் தகவல்களும் தரவுகளும் முழுமையாக உள்ளதோடு ஏனைய மாவட்டங்களின் தகவல்களையும் தரவுகளையும் பெற்ற பின்னர் வழங்குகின்றேன் என்று பதிலளித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தெஹிவளையில் தீவைத்து நபர் படுகொலை செய்யப்பட்ட...

2026-09-05 14:34:35
news-image

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழையமாட்டார்கள்...

2026-09-05 14:12:40
news-image

முள்ளிப்பொத்தானை புகாரி நகர் பாடசாலையில் கட்டட...

2026-09-05 14:10:50
news-image

சட்டவிரோத கடல் அட்டை ஏலம்: மன்னார்...

2026-09-05 13:52:51
news-image

நாட்டில் மின்வெட்டு இல்லை – நிலக்கரி...

2026-09-05 13:30:02
news-image

கிழக்கு, ஊவா மற்றும் வடமத்தியின் சில...

2026-09-05 13:21:49
news-image

பொரலஸ்கமுவ துப்பாக்கிச் சூடு பாதாள உலகக்...

2026-09-05 12:58:03
news-image

22ஆவது திருத்தத்தை மக்கள் தீர்ப்புக்கு கொண்டுசெல்ல...

2026-09-05 11:58:20
news-image

நாட்டின் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன...

2026-09-05 12:00:33
news-image

2029-2030க்குள் கீழ் மல்வத்து ஓயா நீர்த்தேக்கத்...

2026-09-05 11:30:36
news-image

ஊழல் மற்றும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் தீவிர...

2026-09-05 11:30:05
news-image

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட...

2026-09-05 11:28:44