(இராஜதுரை ஹஷான்)
ஐ.ஓ.சி. நிறுவனம் எரிபொருளின் விலையை அடிக்கடி அதிகரிப்பது பிரச்சினைக்குரியதாக உள்ளது.
ஐ.ஓ.சி நிறுவனத்துடனான எண்ணெய் விநியோக ஒப்பந்தத்தை பரிசீலனை செய்யுமாறு வலுசக்தி அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளேன்.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருளின் விலையை அதிகரிக்காது என வலுசக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்தார்.
கொழும்பில் சனிக்கிழமை (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
ஐ.ஓ.சி நிறுவனம் எரிபொருளின் விலையை அடிக்கடி அதிகரிப்பது பிரச்சினைக்குரியதாக காணப்படுகிறது.
கடந்த 10ஆம் திகதி விலை அதிகரிக்கப்பட்ட போது இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விலைக்கமைய விலையினை பரிசீலனை செய்யுமாறு ஐ.ஓ.சி நிறுவனத்தின் நிர்வாக சபைக்கு அறிவுறுத்தினோம்.
ஐ.ஓ.சி நிறுவனத்தினுடனான எரிபொருள் விநியோக ஒப்பந்தத்தை பரிசீலனை செய்யுமாறு வலுசக்தி அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளேன்.
ஒப்பந்தத்தில் ஏதேனும் மாற்றம் ஏற்படுத்த முடியுமாயின் அது குறித்து அமைச்சரவை மட்டத்தில் அவதானம் செலுத்தப்படும்.
ஐ.ஓ.சி நிறுவனம் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளதால் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும் எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்படாது.தற்போது நடைமுறையில் உள்ள விலையில் எவ்வித மாற்றமும் கிடையாது.
கடந்த நாட்களை காட்டிலும் தற்போது எரிபொருள் பெறுதலுக்கான வரிசை கட்டம் கட்டமாக குறைவடைந்து வருகிறது.
40 ஆயிரம் மெற்றிக்தொன் எரிபொருள் தரையிறக்கப்பட்டுள்ளது. 37500 மெற்றிக்தொன் எரிபொருள் அடங்கிய கப்பல் நாட்டை வந்தடையும் அத்துடன் எதிர்வரும் மாதம் முதல் வாரத்தில் 37500 மெற்றிக்தொன் எரிபொருள் அடங்கிய கப்பல் நாட்டை வந்தடையும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM