இன்ஸ்டாகிராம் காதலர்களுடன் ஊர் சுற்றுவதற்கு இடையூறாக இருந்ததாக, தனது ஒரு வயது ஆண்குழந்தைக்கு உணவுடன் மது ஊற்றி கொடுத்து கொலை செய்த சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.
ஐந்தாவது காதலனுடன் உல்லாசமாக இருக்க ஒரு வயது குழந்தை இடைஞ்சலாக இருப்பதை அடுத்து அந்த குழந்தைக்கு சோறுடன் மது கொடுத்து கொலை செய்த குறித்த பெண் தற்போது பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவின் நீலகிரி மாவட்டம் உதகையை சேர்ந்த கீதா என்பவர் ஏற்கனவே மூன்று திருமணம் செய்து மூன்று கணவரிடம் இருந்து பிரிந்து வாழ்கிறார்.
இதனை அடுத்து ஒரே நேரத்தில் இரு ஆண்களை அவர் காதலித்து வந்ததாகவும் இந்த காதலுக்கு தனது ஒரு வயது குழந்தை இடைஞ்சலாக இருந்ததை அடுத்து சோறுடன் மது கொடுத்து கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த கொலையை உறுதி செய்த பொலிஸார் அவரை கைது செய்து விசாரணை செய்தனர்.
இந்த விசாரணையில் ஒரு குழந்தை தனது காதலுக்கு இடைஞ்சலாக இருந்ததால் சோறுடன் மது கொடுத்து, தொட்டிலில் படுக்க வைத்து அந்த குழந்தையை சுவற்றுடன் மோத வைத்து கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.
இதனை அடுத்து அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்த பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பெற்ற தாயே தனது ஒரு வயது குழந்தையை கொடூரமாக கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM