பதுளை பிரதேசத்தில் முச்சக்கரவண்டியொன்று விபத்துக்குள்ளானதில் சிறுமியொருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

சனிக்கிழமை (26) பதுளை அம்பகஸ்தோவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொடலிந்த பகுதியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பயணித்த குறித்த முச்சக்கரவண்டி கட்டுப்பாட்டையிழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 9 வயதுடைய சிறுமியொருவரே உயிரிழந்துள்ளார் .

இதேவேளை படுகாயமடைந்தவர்களில் ஒரு சிறுவன் உட்பட இரண்டு சிறுமிகள் அம்பகஸ்தோவ மற்றும் பரணகம வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முச்சக்கர வண்டி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். அம்பகஸ்தோவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது