மலையக மக்களின் நிலவுரிமை, வீட்டுரிமை குறித்து ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச அமைப்புகள்  கவனம் செலுத்த வேண்டும்

By MD.Lucias

18 Oct, 2016 | 11:55 AM
image

இலங்­கையைப் பொறுத்­த­வ­ரையில் ஆகக் குறைந்த மட்ட ஊதி­யத்தை பெறு­வது தோட்­டத்­தொ­ழி­லா­ளர்­களே ஆவர். ஒப்­பீட்டு ரீதியல் ஏனைய துறை­க­ளை­விட முறை­சாரா தொழி­லாளர் பெறும் வேத­னத்­தை­விட குறைந்த நாளாந்த ஊதி­யத்­தையே பெறு­கின்­றனர். இலங்­கை ­பற்­றிய கவ­னத்தை செலுத்­து­கின்ற ஐக்­கிய நாடுகள் சபை போன்ற சர்­வ­தேச அமைப்­புகள் இம்­மக்­களின் உரி­மை­களும் அபி­லா­ஷைகளும் குறித்து கவனம் செலுத்த வேண்­டிய கடப்­பாட்டை கொண்­டுள்­ளன. மலை­யகப் பெருந்­தோட்ட மக்­களின் நிலம் மற்றும் வீட்­டு­ரிமை சர்ச்சைக்­கு­ரிய விட­ய­மாகக் காணப்­ப­டு­கின்­றது. இன்­று­வ­ரையும் 50 வீதத்­திற்கு மேலான மக்கள் பிரித்­தா­னியர் அமைத்த “லயன்” வீடு­க­ளி­லேயே வாழ்­கின்­றனர்.  ஆனால் இந்த லயன் அறையோ, அந்த நிலமோ அவர்­களின் உரி­மை­யாகக் காணப்­ப­ட­வில்லை என்று ஐக்­கிய நாடுகள் சபையின் சிறு­பான்மை உரிமை சம்­பந்­த­மான சிறப்பு அறிக்­கை­யாளர் கலா­நிதி ரீட்டா ஐசக்­கிடம் எடுத்­து­ரைக்­கப்­பட்­டுள்­ளது.

இலங்­கைக்கு விஜயம் மேற்கொண்­டுள்ள ஐக்­கிய நாடுகள் சபையின் சிறு­பான்மை உரிமை சம்­பந்­த­மான சிறப்பு அறிக்­கை­யாளர் கலா­நிதி ரீட்டா ஐசக் சனிக்­கி­ழமை மலை­ய­கத்­திற்­கான விஜ­யத்­தி­னையும் மேற்­கொண்டார். இதன் போது சமூக சேவை­யா­ளர்கள், புத்­தி­ஜீ­வி­க­ளு­ட­னான சந்­திப்பும் நடை­பெற்­ற­துடன்  தெல்­தோட்­டடை லிட்­டில்­வெலி தோட்ட மக்­களை நேரில் சென்று பார்­வை­யிட்டு தோட்ட மக்கள் எதிர்­நோக்கும் பிரச்­சி­னைகள் குறித்து கேட்டு அறிந்தார்.

இங்கு மலை­யக சிறு­பான்மை சமூகம் எதிர்நோக்கும் உரி­மைகள் தொடர்­பான பிரச்­சி­னைகள் தொடர்பில் ஐக்­கிய நாடுகள் சபையின் சிறு­பான்மை உரிமை சம்­பந்­த­மான சிறப்பு அறிக்­கை­யாளர் கலா­நிதி ரீட்­ட­வி­டமும் அவ­ரது குழு­வி­டமும் விளக்கம் அளிக்­க­ப்பட்­டது.  ஐக்­கிய நாடுகள் சபையின் சிறு­பான்மை உரிமை சம்­பந்­த­மான சிறப்பு அறிக்­கை­யாளர் கலா­நிதி ரீட்டா வரு­கை தந்­தி­ருந்த சமயம், சிவில் சமூகம் சார்­பாக மனித அபி­வி­ருத்தி தாபனம் மற்றும் சமூக ஆய்­வா­ளர்கள், புத்தி ஜீவிகள் பின்வரும் விட­யங்­களை முன்வைத்­தனர்.

மலை­யக தமிழ் மக்கள் இலங்­கையின் சமூக, பொரு­ளா­தார, அர­சியல் கட்­ட­மைப்பில் மிக முக்­கி­ய­மா­ன­தொரு சிறு­பான்மை அமைப்­பி­ன­ராக காணப்­ப­டு­கின்­றனர். வர­லாற்று ரீதி­யாக பல்­வேறு பாகு­பா­டு­க­ளுக்கும், மனித உரிமை மீறல்­க­ளுக்கும் உள்­ளாக்­கப்­பட்டு வரு­கின்ற மலை­யக தமிழ் மக்கள் ஏறக்­கு­றைய 1.5 மில்­லியன் சனத்­தொ­கையை கொண்­டுள்­ளனர். 

இலங்­கை ­பற்­றிய கவ­னத்தை செலுத்­து­கின்ற ஐக்­கிய நாடுகள் சபை போன்ற சர்­வ­தேச அமைப்­புகள் இம்­மக்­களின் உரி­மை­களும் அபி­லா­ஷைகளும் குறித்து கட்­டாயம் கவ­ன­மெ­டுக்க வேண்­டிய கடப்­பாட்டை கொண்­டுள்­ளன. நல்­லாட்­சிக்­கான அர­சாங்கம் அர­சியல் யாப்பு சீர்தி­ருத்தம், நல்­லி­ணக்கப் பொறி­முறை, பொரு­ளா­தாரக் கட்­ட­மைப்பு சீர்

­தி­ருத்தம், சட்­ட­வாட்சி, மனித உரி­மைகள் குறித்த கரி­சனை போன்ற விட­யங்­களில் மிகுந்த கவ­னஞ்­செ­லுத்தி வரு­கின்­றமை நல்ல நட­வ­டிக்­கை­க­ளாக கரு­தப்­ப­டு­கின்ற அதே­வேளை, இப்­பொ­றி­மு­றை­களில் சிறு­பான்­மை­யின மக்­களும் குறிப்­பாக மலை­யக மக்­களும் உள்­ளீர்க்­கப்­பட வேண்டும். 

அத்­துடன் அவர்கள் தொழி­லா­ளர்­க­ளாக மாத்­திரம் பார்க்­கப்­ப­டாமல் இந்­நாட்டின் பிர­ஜைகள் என்ற உரி­மை­யையும் அந்­தஸ்­தையும் பெற வேண்­டி­ய­வர்­க­ளாக இருக்­கின்­றார்கள். அர­சியல் யாப்பு சீர்தி­ருத்­தத்தில் மலை­யக மக்­களின் அர­சியல், பொரு­ளா­தார, சமூக, கலா­சார உரி­மைகள் உறு­திப்­ப­டுத்­தப்­பட வேண்டும். மற்றும் இன, மத, சாதிய, பால் பாகு­பா­டுகள் கலை­யப்­பட்டு அடிப்­படை மனித உரி­மைகள் சக­ல­ருக்கும் உறு­திப்­ப­டுத்­தப்­பட வேண்டும்.

இம்­மக்கள் இலங்­கையில் வறு­மைக்கு உள்­ளாக்­கப்­பட்ட சமூ­க­மாகக் காணப்­பட்­டனர். ஆனால் அது தற்­பொ­ழுது 2009–2010 ஆம் ஆண்­டு­களில் 9 வீதம் துரித வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ளது. இப்­புள்­ளி­வி­ப­ரங்­களின் நம்­ப­கத்­தன்மை கேள்­விக்­கு­றி­யா­கி­யுள்­ளது. 

மலை­யகப் பெருந்­தோட்ட மக்­களின் நிலம் மற்றும் வீட்­டு­ரிமை சர்ச்சைக்­கு­ரிய விட­ய­மாகக் காணப்­ப­டு­கின்­றது. இன்­று­வ­ரையும் 50 வீதத்­திற்கு மேலான மக்கள் பிரித்­தா­னியர் அமைத்த “லயன்” வீடு­க­ளி­லேயே வாழ்­கின்­றனர். ஆனால் இந்த லயன் அறையோ, அந்த நிலமோ அவர்­களின் உரி­மை­யாகக் காணப்­ப­ட­வில்லை. நல்­லாட்­சிக்­கான அர­சாங்கம் தற்­பொ­ழுது வீட­மைப்புத் திட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்தி வரு­கின்­றமை பாராட்­டுக்­கு­ரி­யது. ஆனால் முன்­னெ­டுப்­புகள் மேலும் விரி­வு­ப­டுத்­தப்­பட வேண்­டி­யி­ருக்­கின்­றது. 

மொழி உரிமை மற்­று­மொரு பிரச்­சி­னை­யாகக் காணப்­ப­டு­கின்­றது. மலை­யகத் தமிழ் மக்கள் பெரும்­பான்­மை­யாக வாழும் மலை­நாட்டுப் பகு­தியில் அரச நிறு­வ­னங்­களில் போதி­ய­ளவு தமி­ழர்கள் நிய­மிக்­கப்­ப­டாமை மொழி உரி­மையை கேள்­விக்­கு­றி­யா­கி­யுள்­ளது. அரச சேவை­களை அணு­கு­வ­தற்­கான உரிமை கேள்­விக்­கு­றி­யா­கி­யுள்­ளது.

நுவ­ரெ­லியா மாவட்­டத்தில், அம்­ப­க­முவ, நுவ­ரெ­லியா போன்ற பிர­தேச செய­ல­கங்கள் இரண்டு லட்­சத்­துக்கு அதி­க­மான மக்கள் தொகையைக் கொண்டு காணப்­ப­டு­கின்­றன. இது மக்கள் அரச சேவை­களை அணு­கு­வ­தற்­கான உரி­மையை கேள்­விக்­கு­றி­யா­கி­யுள்­ளது. பிர­தேச சபை சட்­டத்தின் 33 ஆவது சரத்து, தோட்ட மக்கள் உள்­ளு­ராட்சி அமைப்­பு­களின் சேவை­களைப் பெற்­றுக்­கொள்­வதில் தடை­களை ஏற்­பத்தி வரு­கின்­றது. இது சட்டச் சீர்தி­ருத்தம் தேவை என்­பதை உணர்த்தி நிற்­கின்­றது. 

பெருந்­தோட்ட மக்­களின் கல்வி, சுகா­தார - வைத்­திய சேவைக்­கான உரிமை ஓப்­பீட்டு ரீதியில் பின்­தள்­ளப்­பட்டு காணப்­ப­டு­கின்­றது. கல்­வியைப் பொறுத்­த­ளவில் தற்­போ­தைய அர­சாங்கம் தேசிய அளவில் குறிப்­பி­டத்­தக்­க­ளவு நிதியை வரவு செலவுத் திட்­டத்­தி­னூ­டாக ஒதுக்­கி­யுள்­ளது. என்­றாலும் கூட மலை­யக பிர­தே­சங்­களில் முழு­மை­யான விஞ்­ஞானம் மற்றும் தங்­கு­மிட வச­தி­க­ளுடன் கூடிய பாட­சா­லை­களோ¸ தேசிய பாட­சா­லை­களோ ஓப்­பீட்டு ரீதியில் மிகக் குறை­வா­கவே காணப்­ப­டு­கின்­றன. 

உதா­ர­ண­மாக நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் ஏறக்­கு­றைய 60 வீத­மான தமிழ் மக்கள் வாழ்­கின்ற போதும் அவர்­க­ளுக்கு ஏறக்­கு­றைய 1வீத பாட­சா­லைகள் 7 மாத்­தி­ரமே காணப்­பட அது சிங்­கள மொழி மூலம் 19 ஆக காணப்­ப­டு­கின்­றது. இவ்­வா­றான பாகு­பா­டுகள் காணப்­ப­டு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்க விட­ய­மாகும்.

தற்­போது அர­சாங்­கத்­தினால் மலை­ய­தத்தில் 25 கணித விஞ்­ஞான பாட­சா­லைகள் அபி­வி­ருத்தி செய்­வ­தற்­கான நிதி ஒதுக்­க­ப்பட்­டுள்­ளது.  பெருந்­தோட்ட சுகா­தார - வைத்­திய துறை தேசிய சர்­வ­தேச நிய­மங்­க­ளுக்கு ஏற்ப தேசிய மய­மாக்­கப்­பட வேண்டும். குறிப்­பாக சிறுவர்¸ பெண்கள் இன விருத்தி சுகா­தார, விட­யங்கள் கவ­னத்தில் கொள்­ளப்­பட வேண்­டி­ய­வை­யாகும். தற்­போ­தைய சூழ்­நி­லையில் பெரும்­பா­லான பெருந்­தோட்ட மருந்­த­கங்கள் தோட்ட வைத்­திய உத­வி­யா­ளர்­க­ளி­னா­லேயே நடத்­தப்­ப­டு­கின்­றன. இவர்­களே சில வேளை­களில் தோட்­டங்­களில் வைத்­தி­யர்­க­ளாக கடமை­யாற்­று­கின்­றனர். இது தேசிய வைத்­தி­யத்­து­றைக்கு ஒரு சவா­லாக அமை­கின்­றது.  மற்றும் மலை­யக பெருந்­தோட்ட மக்­களின் வாழ்­வா­தா­ரத்­திற்­கான உரிமை ஓர் அடிப்­படை உரி­மை­யாகும். பெருந்­தோட்ட தொழி­லா­ளர்­க­ளுக்கு கூட்டு ஓப்­பந்த அடிப்­ப­டையில் நாட்­சம்­பளம் நிர்­ண­யிக்­கப்­ப­டு­கின்­றது. ஆனால் கடந்த இரு வருட கால­மாக சம்­பள உயர்வு வழங்­கப்­ப­ட­வில்லை. தொழிற்­சங்­க-­ மு­த­லா­ளிமார் சம்­மே­ளன கூட்டு ஓப்­பந்த பேச்சு வார்த்தை தோல்­வியை தழு­வி­யுள்­ளது. இங்கு கூட்­டாண்மை சமூக பொறுப்பு அல்­லது ஐ.நா வர்த்­தக ஒழுக்க விதி­களை அவர்கள் பின்­பற்­று­கின்­றார்­க­ளாக என்­பது கேள்­விக்­கு­றி­யா­கவே இருக்­கின்­றது. 

இலங்­கையைப் பொறுத்­த­வ­ரையில் ஆகக் குறைந்த மட்ட ஊதி­யத்தை பெறு­வது தோட்­டத்­தொ­ழி­லா­ளர்­களே ஆவர். ஒப்­பீட்டு ரீதியல் ஏனைய துறை­க­ளை­விட முறை­சாரா தொழி­லாளர் பெறும் வேத­னத்­தை­ விட குறைந்த நாளாந்த ஊதி­யத்­தையே பெறு­கின்­றனர். எனவே அவர்­களின் வாழ்­வா­தார உரிமை கேள்­விக்­கு­றி­யா­ன­தாக காணப்­ப­டு­கின்­றது.  இம்­மக்­களைப் பொறுத்­த­வ­ரையில் அபி­வி­ருத்­திக்­கான உரி­மையை அணு­கு­வதில் பல்­வேறு தடை­களும், பாகு­பா­டு­களும் காட்­டப்­ப­டு­கின்­றன. இம்­மக்­களின் அபி­வி­ருத்தி உரி­மை­யா­னது சமூக, பொரு­ளா­தார அர­சியல் உரி­மை­க­ளுடன் சம்­பந்­தப்­பட்­ட­தாகக் காணப்­ப­டு­கின்­றது. எவ்­வா­றெ­னினும், பெரும்­பா­லான பெருந்­தோட்­டங்கள் கம்­ப­னி­க­ளி­னாலும், மற்றும் அரச நிறு­வ­னங்­க­ளி­னாலும் நிர்­வ­கிக்­கப்­ப­டு­கின்­ற­மையால் தேசிய அபி­வி­ருத்தி திட்­டங்கள், அபி­வி­ருத்தி நலன்கள் தோட்­டங்­களை அணு­கு­வதில், அல்­லது பெருந்­தோட்ட மக்கள் அத்­திட்­டங்­களை அணு­கு­வதில் பல்­வேறு குறை­பா­டுகள் மற்றும் தடைகள் காணப்­ப­டு­கின்­றன. 

இலங்­கையில் புதி­தாக தயா­ரிக்­கப்­ப­ட­வுள்ள அர­சி­யல்­யாப்பு, இலங்கை சமூ­கத்தை, எதிர்­கால சவால்­களை சந்­திக்க, சாதிக்க கூடிய ஒரு சமூ­க­மாக இட்டு செல்­ல­ வேண்டும். இவ்­யாப்பு சகோ­த­ரத்­துவம் ஒருமைப்பாடு ஒருங்கிணைந்த அபிவிருத்தி மனித உரிமை ஜனநாயகத்தை மதிக்கும் தன்மை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும். இப்பின்னணியில் எமது அரசியலமைப்பானது ஒற்றையாட்சி பண்புகளையா? அல்லது சமஷ்டி பண்புகளையா? கொள்ள வேண்டுமென்ற விவாதம் எழுகின்றது. இலங்கை சமூகம் பல்லின பல மத, பல கலாசார பண்புகளை கொண்ட ஒரு சமூகமாக இருக்கின்றமையால், ஆட்சியிலே சகலரும் பங்குபற்றும், சகல கருத்துக்களும் உள்வாங்கப்பட்டு. பன்முக தன்மை, பன்முக ஜனநாயகம், மக்களின் ஜனநாயகத்திற்கு முதன்மை சட்டத்தின் ஆட்சி, நல்லாட்சி, மனித உரிமைகளை நிலைநாட்டல் என்பவற்றை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட வேண்டிய அவசியம் என நாம் கருதுகின்றோம். 

இலங்கை பெருந்தோட்டத்துறையை பொறுத்தளவில் அண்மைக்காலமாக கட்டமைப்பு மாற்றம் பற்றி பேசப்பட்டு வருகின்றது. 

இச்சந்தர்ப்பத்தில் தொழிலாளர்கள் சுதந்திரமான தொழிலாளர்களாக அடயாளப்படுத்தப்பட வேண்டும். அரசியல் யாப்பின் அடிப்படை உரிமைகள் உறுதிப்படுத்தப்படுவதன் ஊடாக இந்நிலையை எய்தலாம் என்று கருத்துரைத்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுபான்மை பிரதிநிதிகளிடையே முக்கிய உரையாடல் அடுத்த...

2023-02-05 17:43:18
news-image

தமிழ்த் தேசியக் கட்சிகளை தனித்து செயற்பட...

2023-02-05 17:44:22
news-image

இலங்கையின் கிராமப் புற அபிவிருத்திக்கு இந்தியாவின்...

2023-02-05 17:41:37
news-image

அரசாங்கத்திடம் ஸ்திரமான பொருளாதாரக் கொள்கைகள் கிடையாது...

2023-02-05 17:32:24
news-image

உள்ளூராட்சி மன்ற தேர்தல் வாக்கெடுப்புக்கு 10...

2023-02-05 17:35:04
news-image

அரசியலமைப்பு பேரவை மூன்றாவது தடவையாக திங்கள்...

2023-02-05 14:39:41
news-image

மலையகத்துக்கான இந்திய அரசின் 10 ஆயிரம்...

2023-02-05 18:01:18
news-image

ராஜபக்சவின் அடிமைத்தனத்திலிருந்து மக்களை விடுவிப்போம் -...

2023-02-05 17:21:35
news-image

தேர்தலுக்கு அச்சமில்லை : தேர்தல் செலவுகளுக்கு...

2023-02-05 17:18:20
news-image

கஜமுத்துக்களை விற்க முயன்ற இளைஞன் கல்முனையில்...

2023-02-05 17:34:01
news-image

இரட்டை பிரஜா உரிமை உடையவர்கள் தொடர்பில்...

2023-02-05 12:55:22
news-image

ஹோட்டல் உரிமையாளரின் மனைவியுடன் மகன் தொடர்பு...

2023-02-05 17:40:33