மலையக மக்களுக்கு எதிராக முன்னெடுக்கும் அடக்குமுறைகள் முடிவிற்குக் கொண்டுவரப்பட வேண்டும் - வடிவேல் சுரேஷ் 

25 Mar, 2022 | 11:45 PM
image

(நா.தனுஜா)

நாட்டின் பெருந்தோட்டப்பயிர்ச்செய்கைக்கும் விவசாய நடவடிக்கைகளுக்கும் மலையக மக்கள் பெரும் பங்களிப்பை வழங்கிவருகின்றார்கள். 

இருப்பினும் அரசாங்கமும் பெருந்தோட்டக்கம்பனிகளும் இணைந்து, அவர்களை அங்கிருந்து வெளியேற்றி புதியதொரு நாடகத்தை அரங்கேற்றுவதற்கு முயற்சிக்கின்றன. 

மலையக மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுவரும் இந்த அடக்குமுறை முடிவிற்குக்கொண்டுவரப்படவேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் வலியுறுத்தினார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் வியாழக்கிழமை (24 )ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அவர் மேலும் கூறியதாவது:

மனித உரிமை மீறல்களுக்கும் அப்பால்சென்று பெருந்தோட்டக்கம்பனிகளும் முதலாளிமார் சம்மேளனமும் மலையக மக்களை வஞ்சித்துவருகின்றது. 

அதேபோன்று மலையக மக்கள் காலங்காலமாக வாழ்ந்துவந்த பெருந்தோட்ட நிலங்களிலிருந்து அவர்களை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

நாட்டின் பெருந்தோட்டப்பயிர்ச்செய்கைக்கும் விவசாய நடவடிக்கைகளுக்கும் மலையக மக்கள் பெரும் பங்களிப்பை வழங்கிவருகின்றார்கள். 

இருப்பினும் அரசாங்கமும் பெருந்தோட்டக்கம்பனிகளும் இணைந்து, அவர்களை அங்கிருந்து வெளியேற்றி புதியதொரு நாடகத்தை அரங்கேற்றுவதற்கு முயற்சிக்கின்றன. 

அங்குள்ள மக்களை வெளியேற்றமுடியாத வகையிலான அறிவுறுத்தல் ஏற்கனவே நடைமுறையில் உள்ளபோதிலும், அவர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கான அறிவித்தல் பெருந்தோட்டக்கைத்தொழில் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற மூன்று தசாப்தகாலப்போரினால் நாட்டின் அபிவிருத்தி 30 வருடங்கள் பின்னடைவைச் சந்தித்தது. 

அதேபோன்று நாட்டின் தேசிய பொருளாதாரத்திற்குப் பிரதான பங்களிப்பை வழங்கிய மலையகமக்கள் இன்றளவிலே பாரிய பின்னடைவைச் சந்தித்திருக்கின்றார்கள். 

மலையக மக்களின் இருப்பையோ, அவர்களின் நிலங்களையோ எம்மால் ஒருபோதும் விட்டுக்கொடுக்கமுடியாது. 

எனவே அரசாங்கமும் பெருந்தோட்டக்கம்பனிகளும் இணைந்து மலையக மக்களுக்கு எதிராக முன்னெடுத்துவரும் இந்த அடக்குமுறை முடிவிற்குக்கொண்டுவரப்படவேண்டும்.

நாடு தற்போது முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடியினால் மலையக மக்களே வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். 

ஆனால் அவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்குரிய எந்தவொரு நடவடிக்கையும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவில்லை. 

இந்த நிலை உடனடியாக முடிவிற்குக்கொண்டுவரப்படவேண்டியது அவசியமாகும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 10:50:13
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08