வவுனியா - வீரபுரம் பகுதியிலுள்ள பாடசாலைக்குள் புகுந்து ஆசிரியர் மீது தாக்குதல்

Published By: Digital Desk 4

25 Mar, 2022 | 03:11 PM
image

வவுனியா, செட்டிக்குளம், பகுதியில் உள்ள பாடசாலையொன்றுக்குள் நுழைந்து, ஆசிரியர் ஒருவர் மீது மூன்று நபர்கள் இணைந்து தாக்குதல் மேற்கொண்டத்தில் படுகாயமடைந்த ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று (25) பாடசாலை ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருந்த போது காலை 8.40 மணியளவில் பாடசாலைக்குள் சென்ற குறித்த பாடசாலை மாணவன் ஒருவரின் தந்தை உள்ளிட்ட மூவர்,  பாடசாலை வளாகத்தில் நின்ற ஆங்கில பாட ஆசிரியரான எஸ்.சாந்தகுமார் (45) என்பவர் மீது கட்டையினால் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். 

மற்றைய ஆசிரியர்கள் இதனை அவதானித்ததும் அங்கிருந்து தப்பித்துச்சென்றுள்ளனர்.

தாக்குதலுக்குள்ளான ஆசிரியர் தலையில் பலத்த காயங்களுக்குள்ளாகிய நிலையில் சக ஆசிரியர்களின் உதவியுடன் செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த செட்டிக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் பாடசாலையில் பழைய மாணவர்கள் , ஆசிரியர்கள் ஒன்று கூடியுள்ளமையினால் பதற்றமான சூழல் நிலவி வந்ததுடன் பொலிஸார் அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தகவல் தொழில்நுட்ப சேவைகள் ஏற்றுமதி துறைக்கு...

2025-03-18 17:05:12
news-image

இன்றைய வானிலை

2025-03-19 06:23:07
news-image

'கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு” எனும் பெயரை...

2025-03-19 05:00:29
news-image

சந்தாங்கன்னி மைதானத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நீச்சல் தடாக...

2025-03-19 04:04:47
news-image

லால் காந்தவிடமிருந்து விசாரணைகளை ஆரம்பியுங்கள் ;...

2025-03-18 14:41:18
news-image

கிரிக்கெட் சபையில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளுக்கு...

2025-03-18 16:48:03
news-image

அரச செலவில் எந்தவொரு தனிப்பட்ட பயணமும்...

2025-03-18 21:40:09
news-image

கிரிக்கெட் சபையில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி...

2025-03-18 16:49:04
news-image

மட்டக்களப்பில் இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புகளை உருவாக்கும்...

2025-03-18 22:33:07
news-image

அஸ்வெசும நலன்புரி நன்மைகள் திட்டத்தில் திருத்தம்

2025-03-18 21:38:21
news-image

பட்டதாரிகளை ஆசிரியர் தொழிலுக்கு இணைத்துக்கொள்ள தடையாக...

2025-03-18 15:34:29
news-image

சுகாதார சேவையாளர்களின் முறையற்ற பணிப்புறக்கணிப்பு குறித்து...

2025-03-18 16:43:50