உணவுப் பாதுகாப்பு என்றால் என்ன ? - மஹிந்தானந்தவிடம் சஜித்  கேள்வி

25 Mar, 2022 | 02:47 PM
image

(எம்,ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

நாட்டில் உணவுப் பாதுகாப்புத் தொடர்பில்  எந்தவித சிக்கலும் கிடையாது, எதிர்வரும் புதுவருட பண்டிகைக் காலங்களில் கைவசம் உள்ள அரிசியை சந்தைக்கு விடுவதற்கு தீர்மானித்துள்ளோம்.  

அதனை குறைந்த விலையில் மக்களுக்கு  விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுப்போம் என அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே தெரிவித்தார்

பாராளுமன்றத்தில் வியாழக்கிழழமை (24) எதிர்க்கட்சி தலைவர் விசேட கூற்றொன்றை முன்வைத்து தெரிவித்து கருத்து பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

சஜித் பிரேமதாச குறிப்பிடுகையில் :

நாடில் உணவுப்பாடுகாப்பு, வலுசக்தி பாதுகாப்பு பாரிய பிரச்சினையாகி இருக்கின்றது, மக்கள் வாழமுடியாத அளவுக்கு அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டிருக்கின்றது. 

மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்திருக்கின்றது. இதனால் மகள் விரக்தியடைந்திருக்கின்றதனர். 

மக்கள் வாழுமுடியாது நாட்டை விட்டு செல்ல ஆரம்பித்துள்ளனர். மன்னார், யாழ் மாவட்டங்களில் இருந்துமக்கள்  இந்தியாவுக்கு செல்ல ஆரம்பித்துள்ளனர். 

தற்போது 2குடுபங்கள் சென்றுள்ளனர். இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்,அதேபோன்று இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல வரிசையில் இருக்கின்றனர்.

இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண அரசாங்கம் எடுத்திருக்கும் நடவடிக்கை என்ன, அரசாங்கத்தின் வேலைத்திட்டம் என்ன என்பதை தெரிவிக்கவேண்டும் என்றார்.

இதற்கு அமைச்சர் மஹிந்தானந்த பதிலளிக்கையில் :

நாட்டில் பயிரிடக்கூடிய நிலங்களில் மேற்கொள்ளப்படும் பயிர்ச்செய்கைகள்  மற்றும் உற்பத்தியைப் பார்க்கும் போது நாட்டில் உணவுப் பாதுகாப்புத் தொடர்பில்  எந்தவித சிக்கலும் கிடையாது என்பது தெளிவாகிறது. 

எதிர்வரும் புதுவருட பண்டிகைக் காலங்களில் கைவசம் உள்ள அரிசியை சந்தைக்கு விடுவதற்கு தீர்மானித்துள்ளோம்.

நெல் ஆலை உரிமையாளர்களின் விருப்பத்திற்கு அரிசியின் விலையை அதிகரிக்காமல் குறைந்த விலையில் மக்களுக்கு அதை விற்பனை செய்வதற்கு நாம் நடவடிக்கை எடுப்போம். 

டொலர் தட்டுப்பாடு காரணமாக  பெரும் பொருளாதார நெருக்கடி உருவாகியுள்ளது. இது எமது நாட்டில் மட்டுமல்ல முழு உலகிலும் தற்போதுள்ள பிரச்சினையாகும். நாம் கிணற்றுக்குள் இருந்து இவற்றைப் பார்த்து விமர்சிக்க முடியாது. 

உலக நாடுகள் பலவற்றிலும் இத்தகைய நெருக்கடி நிலை உள்ளது அதனால் நெருக்கடி நிலைமையை நாங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றார்.

இதற்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச :

உணவுப்பாதுகாப்பு என்றால் என்ன?. உணவுப்பாதுகாப்பு என்பதன் வியாக்கியானம், விநியோகிப்பது மாத்திரமல்ல, மக்களால் தாங்கிக்கொள்ள முடியுமான விலைக்கு பெற்றுக்கொள்ள பொருட்கள் இருக்கவேண்டும். ஆனால் நாட்டில் இன்று எரிபொருள். காஸ், பால்மா மக்களுக்கு தாங்கிக்கொள்ள முடியுமான விலைக்கு இல்லை. 

அதேபோன்று அத்தியாவசியமான பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு இருந்துவருகின்றது.

நாட்டில் இன்று விலை கட்டுப்பாடு இருக்கின்றதா இல்லையா? என்பதை அரசாங்கம் தெரிவிக்கவேண்டும். என்றார்.

இதற்கு அமைச்சர் மஹிந்தானந்த பதிலளிக்கையில் :

விவசாய அமைச்சர் என்ற வகையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் தட்டுப்பாடின்றி சந்தைக்கு விநியோகிக்க வேண்டியதே எனது கடமை.  

அந்த வகையில் அரிசி மரக்கறி போன்ற பொருட்கள் சந்தையில் தற்போது தட்டுப்பாடின்றி காணப்படுகின்றன.

நெல், அரிசி தொகையை திடீரென ஆலை உரிமையாளர்கள் மறைத்தார்கள் அதனால், வேறு வழியில்லாமல் அதற்கான கட்டுப்பாட்டு விலையை நாங்கள் இல்லாமலாக்கினோம். 

சீனிக்கு கட்டுப்பாட்டு விலை இருக்கின்றது. இதுதொடர்பில் இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பார் என்றார். 

இதன்போது எழுந்த இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்குபுர தெரிவிக்கையில் :

சீனிக்கு கட்டுப்பாடு விலை இல்லாவிட்டாலும் நாங்கள் 158 ரூபாவுக்கு வழங்குவதற்கு தீர்மானித்திருக்கின்றோம். 

சதொச மற்றும் கூட்டுறவு கடைகள் ஊடாக இந்த விலைக்கு விற்பனை செய்வோம். என்றாலும் வெளியில் சீனி ஒரு கிலோ 200ரூபா வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

2022-09-30 08:58:20
news-image

திருடர்களை பாதுகாக்கும் அமைப்பே தேசிய சபை...

2022-09-29 21:45:55
news-image

" தற்போதைய அடக்குமுறைகள் மனித உரிமைகள்...

2022-09-29 16:37:02
news-image

மனித உரிமை பேரவையின் தீர்மானம் நியாயமற்றது...

2022-09-29 21:21:18
news-image

பிரதமர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்த அவதானம்...

2022-09-29 15:11:35
news-image

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்த சட்டமூலம்...

2022-09-29 21:25:13
news-image

ஜனாதிபதி நாடு திரும்பியதும் அதி உயர்...

2022-09-29 21:19:57
news-image

தேசிய கொள்கை மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை...

2022-09-29 21:54:43
news-image

பின்தங்கிய கிராமங்களில் கர்ப்பிணித்தாய்மார்களுக்கு குருதிச்சோகை -...

2022-09-29 21:22:50
news-image

பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும்...

2022-09-29 21:25:57
news-image

அடையாள அணிவகுப்பைக் கோரிய பொலிசார் ;...

2022-09-29 21:56:10
news-image

பூகோள அரசியல் போக்குகள், பொருளாதார நெருக்கடியை...

2022-09-29 19:25:15