நியூ­ஸி­லாந்து –இலங்கை அணி கள் மோதிய 2ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்­டியில் 5 விக்­கெட்­டுக்கள் வித்­தி­யா­சத்தில் நியூ­ஸி­லாந்து அணி வெற்­றி­பெற்­றது. ஹமில்­டனில் நடந்த இந்தப் போட்­டியில் முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய இலங்கை அணி முதல் இன்­னிங்ஸில் 292 ஓட்­டங்­களைப் பெற்று சகல விக்­கெட்­டுக்­க­ளையும் இழந்­தது.அதன்­பி­றகு தனது முதல் முன்­னிங்ஸை ஆடிய நியூ­ஸி­லாந்து அணி 237 ஓட்­டங்­களைப் பெற்று ஆட்­ட­மி­ழந்­தது.

55 ஓட்­டங்கள் முன்­னி­லையில் 2ஆவது இன்­னிங்ஸை விளை­யா­டிய இலங்கை அணி நியூ­ஸி­லாந்தின் வேகப்­பந்து வீச்­சாளர் சௌதியின் அபா­ர­மான பந்து வீச்சால் திண­றி­யது.

இறுதியில் இலங்கை அணி 36.3 ஓவர்­களில் 133 ஓட்­டங்­க­ளுக்கு சுருண்­டது. இதனால் நியூ­ஸி­லாந்து அணி க்கு 189 ஓட்­டங்கள் என்ற இல­கு­வான வெற்றி இலக்கு நிர்­ண­யிக்­கப்­பட்­டது.

நேற்­று­முன்­தினம் 3ஆவது நாள் ஆட்­டத்தின் முடிவில் நியூ­ஸி­லாந்து அணி 5 விக்­கெட்­டுக்­களை இழந்து 142 ஓட்­டங்­களை பெற்­றி­ருந்­தது. வில்­லி­யம்ஸன் 75 ஓட்­டங்­க­­ளுடன் களத்தில் இருந்தார்.

நேற்று நான்­கா­வது நாள் ஆட்டம் ஆரம்­ப­மா­னது. வில்­லி­யம்ஸன் தொடர்ந்து அபா­ர­மாக விளை­யாடி சதம் அடித்தார். 47ஆவது டெஸ்டில் விளை­யாடும் அவ­ருக்கு இது 4ஆவது சத­மாகும்.

இறு­தியில் நியூ­ஸி­லாந்து அணி 5 விக்­கெட்­டுக்கள் இழப்­பிற்கு 189 ஓட்­டங்­களைப் பெற்று 5 விக்­கெட்­டுக்கள் வித்­தி­யா­சத்தில் வெற்றி பெற்­றது. வில்­லி­யம்ஸன் 164 பந்­து­க­ளுக்கு முகம்­கொ­டுத்து 108 ஓட்­டங்­களைப் பெற்று ஆட்­ட­மி­ழக்­காமல் இருந்தார். இதில் 12 பவுண்­ட­ரி­களும், 1 சிக்­ஸரும் அடங்கும். இலங்கை அணி சார்பில் பந்­து­வீச்சில் அசத்­திய சமீர 4 விக்­கெட்­டுக்­களை வீழ்த்­தினார். லக்மால் 1 விக்­கெட்டை வீழ்த்­தினார்.

இந்த வெற்­றியின் மூலம் நியூ­ஸி­லாந்து அணி 2–0 என்ற கணக்கில் தொடரை கைப்­பற்­றி­யது. நியூ­ஸி­லாந்து அணி ஏற்­க­னவே டுனிடில் நடந்த முதல் டெஸ்டில் வெற்றி பெற்று இருந்தது.

இலங்கை – நியூஸிலாந்து அணிகள் மோதும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி எதிர்வரும் 26ஆம் திகதி கிறிஸ்ட் சர்ச் நகரில் நடைபெறுகின்றது.