நாடு கடத்தப்படுவாரா புட்டினின் ரகசிய காதலி ?

25 Mar, 2022 | 10:46 AM
image

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் ரகசிய காதலியை நாடு கடத்த வேண்டும் என்று புட்டின் எதிர்ப்பாளர்கள் கோரிக்கை மனுவொன்றை சுவிற்சர்லாந்து அரசுக்கு அனுப்பியுள்ளனர்.

69 வயதான ரஷ்ய ஜனாதிபதி புட்டினுக்கு ஒரு ரகசிய காதலி இருக்கிறார். 

அவரது பெயர், அலினா கபேவா (வயது 38) இவர் முன்னாள் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை ஆவார். 

World champion Alina Kabaeva of Russia performs the ball event in the World Rhythmic Gymnastics Club Championships in Tokyo October 10, 1999

இவர் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டு, தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

இவர் புட்டினுடனான ரகசிய காதலில் பிறந்த குழந்தைகளுடன், சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஒரு சொகுசு மாளிகையில் ரகசிய வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.

உக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள சூழலில் பாதுகாப்பு காரணங்களையொட்டி ரகசிய காதலி இந்த மாத ஆரம்பத்திலேயே ஒரு தனியார் பண்ணை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவித்தன.

இந்த நிலையில் புட்டின் எதிர்ப்பாளர்கள், அவரது ரகசிய காதலியை நாடு கடத்த வேண்டும் என்று ஒரு கோரிக்கை மனுவை சுவிற்சர்லாந்து அரசுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Vladimir Putin's Olympic gold-winning gymnast mistress Alina Kabaeva (right) is allegedly hiding with their four young children in a private chalet in Switzerland

அந்த மனுவில், தற்போது போர் நடந்து வந்தபோதும், சுவிட்சர்லாந்து புதினின் ரகசிய கூட்டாளியை தொடர்ந்து கவனித்து வருகிறது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், ஹிட்லரையும், அவரது காதலி ஈவாவையும் புட்டினுடனும் அவரது காதலியுடனும் ஒப்பிட்டு, இருவரும் ஒன்று சேர வேண்டிய தருணம் இது என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவில் ‘சேஞ்ச்.ஆர்க்.’ என்ற வலைத்தளத்தில் பதிவிடப்பட்ட இந்த மனுவில் இதுவரை 57 ஆயிரம் பேர் கையெழுத்து போட்டுள்ளதாக தகவ் தெரிவிக்கின்றது.

She is a famous Olympic gold medal (pictured with Vladimir Putin) winning rhythmic gymnast

சுவிற்சர்லாந்து அரசு புட்டினின் காதலியை நாடு கடத்தி அவருடன் சேர்த்து வைக்குமா என்ற எதிர்பார்ப்பு உலக அரங்கில் தற்போது எழுந்துள்ளது.

மேற்கத்திய நாடுகள் புட்டினின் காதலிக்கு மட்டும் பொருளாதார தடை எதையும் விதிக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47