குமார் சங்கக்காரவின் சாதனையை முறியடித்தார் ஸ்டீவன் ஸ்மித்

25 Mar, 2022 | 10:36 AM
image

(என்.வீ.ஏ.)

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தீர்மானமிக்க 3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 351 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு 2 ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் பாகிஸ்தான், நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 73 ஓட்டங்களைப் பெற்றிருந்தது, ஆரம்ப வீரர்களான இமாம்-உல்-ஹக் 42 ஓட்டங்களுடனும் அப்துல்லா ஷபிக் 27 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

 2 ஆவது இன்னிங்ஸில் 10 விக்கெட்களும் மீதமிருக்க   போட்டியில் வெற்றிபெறுவதற்கு பாகிஸ்தான்   90 ஓவர்களில் மேலும் 278 ஓட்டங்கள் பெறவேண்டியுள்ளது.

போட்டியின் நான்காம் நாளான வியாழக்கிழமை 24  ஆம் திகதி தேநீர் இடைவேளைக்கு சற்று பின்னர் 3 விக்கெட் இழப்புக்கு 227 ஓட்டங்களுடன் அவுஸ்திரேலிய அணித்தலைவர் பெட் கமின்ஸ் துணிச்சலுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை நிறுத்திக்கொண்டார்.

கராச்சியில் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்த 2 ஆவது டெஸ்டில் 507 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு 2 ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட்களை இழந்து 443 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

ராவல்பிண்டியில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியும் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்திருந்தது.

நான்காம் நாள் ஆட்டத்தில் கடைசிப் பந்துக்கு முந்தைய பந்தில் ஷபிக்கை ஆட்டமிழக்கச் செய்ய கிடைத்த வாய்ப்பை துரதிர்ஷ்டவசமாக அவுஸ்திரேலியா தவறவிட்டது. 

மார்னுஸ் லபுஸ்சானேயின் பந்துவீச்சில் கிடைத்த பிடியை நூலிழையில் ஸ்மித் தவறவிட பந்து பவுண்ட்றியை சென்றடைந்தது.

அவுஸ்திரேலிய துடுப்பாட்டத்தில் உஸ்மான் கவாஜா குவித்த சதமும் ஸ்டீவன் ஸ்மித் 8,000 டெஸ்ட் ஓட்டங்களைக் கடந்தமையும் மைல்கல்களாக அமைந்தன.

பாகிஸ்தானை பிறப்பிடமாகக் கொண்ட கவாஜா 31 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது நசீம் ஷாவினால் போல்ட் செய்யப்பட்டார். 

ஆனால் அது நோபோல் என மத்தியஸ்தரினால் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து திறமையாகத் துடுப்பெடுத்தாடிய  கவாஜா ஆட்டமிழக்காமல்  104 ஓட்டங்களைப் பெற்றதுடன் இந்தத் தொடரில் மொத்தமாக 496 ஓட்டங்களைக் குவித்தார். 

கவாஜா பெற்ற 12 ஆவது டெஸ்ட் சதம் இதுவாகும்.

பாகிஸ்தானுக்கு எதிராக 24 வருடங்களுக்கு முன்னர் பாகிஸ்தானில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மார்க் டெய்லர் மொத்தமாக பெற்ற 513 ஓட்டங்களைவிட கவாஜாவின் எண்ணிக்கை 17 ஓட்டங்கள் மாத்திரமே குறைவாக இருந்தது.

இதேவேளை தனது 151 ஆவது இன்னிங்ஸில் ஸ்டீவன் ஸ்மித் 8,000 ஓட்டங்களைக் கடந்தார், இதன் மூலம் குமார் சங்கக்காரவசம் இருந்த சாதனையை ஸ்மித் முறியடித்தார். 

சங்கக்கார 12 வருடங்களுக்கு முன்னர் கொழும்பில் தனது 152 ஆவது இன்னிங்ஸில் 8,000 ஓட்டங்களைப் பூர்த்தி செய்திருந்தார்.

1998 க்குப் பின்னர் பாகிஸ்தானுக்கு அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி விஜயம்செய்திருப்பது இதுவே முதல் தடவையாகும், இதற்கு முன்னர் பாதுகாப்பு காரணங்களைக் காட்டி அவுஸ்திரேலியா அங்கு செல்ல மறுத்திருந்தது.

கடைசி டெஸ்ட் எண்ணிக்கை சுருக்கம்

அவுஸ்திரேலியா 1ஆவது இன் : 391

  1.  உஸ்மான் கவாஜா 91
  2. கெமரன் க்றீன் 79
  3. அலெக்ஸ் கேரி 67
  4. ஸ்டீவ் ஸ்மித் 59
  5. நசீம் ஷா 58 - 4 விக்.
  6. ஷஹீன் ஷா அப்றிடி 79 - 4 விக்.

பாகிஸ்தான் 1ஆவது இன்:  268  

  1. அப்துல்லா ஷபிக் 81
  2. அஸார் அலி 78
  3. பாபர் அஸாம் 67
  4. பெட் கமின்ஸ் 56 - 5 விக்.
  5. மிச்செல் ஸ்டார்க் 33 - 4 விக்.

அவுஸ்திரேலியா 227 - 3 விக். டிக்ளயார்ட் (உஸ்மான் கவாஜா 104 ஆ.இ., டேவிட் வோர்னர் 51)

பாகிஸ்தான் 2ஆவது இன்: 4ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 73

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-20 00:04:00
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41