அதிவேக வீதிகளில் விசேட வேகக் கட்டுப்பாடு நிலையங்கள் ஸ்தாபித்து, கண்காணிப்பு கருவி பொருத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த வேக கட்டுப்பாட்டை மீறும் சாரதிகளிடமிருந்து தண்டப்பணம் அறவிடப்படவுள்ளதாக வீதிப் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது. 

தண்டப்பணத்தை செலுத்த தவறும் பட்சத்தில், வேக கட்டுப்பாட்டை மீறிய குற்றச்சாட்டின் பேரில் பொலிஸாரின் ஊடாக குறித்த சாரதிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வீதி விபத்துக்கள் அதிகரித்து வருவதனால், அவற்றை கட்டுப்படுத்தும் நோக்குடனேயே குறித்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.