மட்டக்களப்பு வீதி விபத்தில் குடும்பஸ்த்தர் உயிரிழப்பு

Published By: Digital Desk 4

24 Mar, 2022 | 08:32 PM
image

மட்டக்களப்பு சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  மாவடிவேம்பு  பண்ணை வீதியில் இன்று (24)  பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் குடும்பஸ்த்தர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

மாவடிவேம்பு பகுதியை சேர்ந்த 32 வயதுடைய சிவலிங்கம் பவாநந்தகுமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

துவிச்சக்கர வண்டியில் வந்தவரை மாவடிவேம்பு - பண்ணை வீதி வழியாக வீதி அபிருத்தி வேலைக்காக   கற்கல் ஏற்றிச் சென்ற கனரக வாகனம்  மோதியதில்  இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ் விபத்து தொடர்பாக  பிரதேச மக்கள் தமது எதிர்ப்பை தெரிவித்து கலகத்தில் ஈடுபட்டனர். இதனால் அமைதியினமை  ஏற்பட்டது.

 சம்பவ இடத்திற்கு சந்திவெளி பொலிஸார்  வருகை தந்து விசாரனைகளை மேற்கொண்டிருந்தனர்.

சடலம் சந்திவெளி பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், டிப்பர் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் விபத்தை ஏற்படுத்திய வாகனம் சந்திவெளிப் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்ப்பட்டுள்ளது. குறித்த விபத்து தொடர்பாக பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யு.எஸ்.எய்ட் நிறுவன விவகாரம் : தெரிவுக்குழுவை...

2025-02-14 12:51:44
news-image

துருக்கிக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு;...

2025-02-14 23:31:55
news-image

பொலிஸ் ஆணைக்குழுவின் மீது அழுத்தம் பிரயோகிக்கும்...

2025-02-14 14:27:05
news-image

உள்ளூர் அதிகாரசபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம்;...

2025-02-14 23:07:15
news-image

எமது பேச்சுவார்த்தைகள் ஒரு கட்சியுடன் வரையறுக்கப்பட்டவையல்ல...

2025-02-14 15:44:00
news-image

யு.எஸ்.எய்ட்டின் இலங்கைக்கான நிதியுதவி விவகாரம் தொடர்பில்...

2025-02-14 15:24:54
news-image

உள்ளூராட்சி மன்ற சட்டமூலம் தொடர்பில் சட்டமா...

2025-02-14 13:06:40
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் நான்கு இராணுவ அதிகாரிகள்...

2025-02-14 20:36:10
news-image

ரணில் - மைத்திரி தலைமையில் எதிர்கால...

2025-02-14 15:55:25
news-image

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்த...

2025-02-14 19:51:16
news-image

மாலம்பேயில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது...

2025-02-14 19:07:56
news-image

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை சபாநாயகர் சபைக்கு அறிவிக்கும்...

2025-02-14 14:14:28