ரஷ்ய இளம் தம்பதியினரிடம் கொள்ளை : 2 மணி நேரத்துக்குள் சந்தேக நபர்கள் கைது 

Published By: Digital Desk 4

24 Mar, 2022 | 08:41 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

 

இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ள ரஷ்ய நாட்டு இளம் தம்பதியினரிடம் இருந்து சுமார் 13 இலட்சம் ரூபா வரை பெறுமதி உடைய பணம்,  அப்பிள் ரக கையடக்கத் தொலைபேசி,  தனியக்க பணப் பறிமாற்று அட்டைகள்,  கடவுச் சீட்டு உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் அடங்கிய பயணப் பை களுத்துறை பகுதியில் கொள்ளையிடப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. 

வெள்ளவத்தையில் கோடீஸ்வர வர்த்தகரை சிறைப்படுத்திய இருவர் பொலிஸாரிடம் வசமாக  சிக்கினர் | Virakesari.lk

எவ்வாறாயினும் கொள்ளை நடைப் பெற்று இரு மணி நேரத்துக்குள் சந்தேக நபர்களைக் கைது செய்து, கொள்ளையிடப்பட்ட பணம், ஆவணங்கள் அடங்கிய பயணப் பையை மீட்க   களுத்துறை தெற்கு பொலிஸாரால் இயலுமாகியுள்ளது.

இந்த ரஷ்ய நாட்டு தம்பதியினர், கலுத்துறை - பலாத்தோட்டை பகுதியில் நடந்து செல்லும் போது மோட்டார் சைக்கிளில் வந்த கொள்ளையன்  அவர்களின் பயணப் பையை கொள்ளையிட்டு சென்றுள்ளான்.

இதனையடுத்தே அந்த தம்பதியினர் அது தொடர்பில் களுத்துறை தெற்கு பொலிசாரிடம் முறையிட்டுள்ளனர். 

அந்த பயணப் பையில் 1335 யூரோ, 1650 அமரிக்க டொலர்,  3250 ரூபா பணம் இருந்ததாக முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளனர்.

முறைப்பாட்டை அடுத்து, களுத்துறை தெற்கு பொலிஸ் நிலைய குற்றவியல் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் கயான்  கிரிஷாந்தவின் தலைமையிலான சிறப்பு குழு விஷேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

கொள்ளை நடந்தப் இடத்திலும் அதனை அண்மித்தும் காணப்பட்ட  சி.சிரி.வி. கானொளிகள்  பொலிசாரால் சோதனையிடப்பட்ட நிலையில்,  குறித்த ரஷ்ய தம்பதியை கொள்ளையர்கள்  தொடர்ச்சியாக பின் தொடர்ந்துள்ளமை தெரியவந்துள்ளது.

 ஸ்கூட்டி ரக மோட்டார் சைக்கிளில்,  இலக்கத் தகட்டின்  ஒரு பகுதி மறைத்தவாறு இக்கொள்ளை இடம்பெற்றிருப்பதும் சி.சி.ரி.வி. கணொளிகள் ஊடாக பொலிசாருக்கு தெரியவந்துள்ளது.

 இவ்வாறான நிலையிலேயே மேலதிக விசாரணைகளில்,  களுத்துறை பொலிஸ் உளவுச் சேவையின் தகவல்களை மையப்படுத்தி மறைந்திருந்த சந்தேக நபரை  களுத்துறை - கித்துலாவ பகுதியில் தங்குமிடமொன்றில்  வைத்து கைது செய்தனர்.

 இதன்போது சந்தேக நபரின் ஸ்கூட்டி ரக மோட்டார் சைக்கிளில் இருக்கையின் கீழால் மறைத்து வைக்கப்பட்டிருந்த கொள்ளையிடப்பட்ட ரஷ்ய தம்பதியின் பயணப் பை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன்  அதிலிருந்த பணம்,  2 கடவுச் சீட்டுக்கள்,  இரு சர்வதேச சாரதி அனுமதிப் பத்திரங்கள்,  ரஷ்ய சாரதி அனுமதிப் பத்திரங்கள், அப்பிள் ரக கையடக்கத் தொலைபேசி, மாஸ்டர் தானியக்க  பணப் பரிமாற்று அட்டைகள் 4,  உள்ளிட்டவை  பத்திரமாக மீட்கப்பட்டுள்ளன.

 இதன்போது சந்தேக நபரிடம் இருந்து  ஹெரோயின் போதைப் பொருளும் மீட்கப்பட்டுள்ளது.

 கைது செய்யப்ப்ட்டவர்  ஹெரோயின் போதைப் பொருளுக்கு அடிமையானவர் எனக் கூறும் பொலிசார்  சந்தேக நபரை நாளை ( 25) நீதிமன்றில் ஆஜர் செய்யவுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08