நாட்டின் வங்கிக்கட்டமைப்பு ஸ்திரமான நிலையிலுள்ளது - மத்திய வங்கி விளக்கம்

Published By: Digital Desk 4

24 Mar, 2022 | 08:46 PM
image

(நா.தனுஜா)

அரச வங்கிகள் மிகவும் சுமுகமான முறையில் இயங்கிவருவதாகவும் நாட்டின் வங்கிக்கட்டமைப்பு ஸ்திரமான நிலையில் இருப்பதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

தனியார் வங்கிகளுக்கு மத்திய வங்கி விடுத்துள்ள முக்கிய அறிவுறுத்தல் |  Virakesari.lk

டொலருக்கான பற்றாக்குறை, பொருட்களின் விலையேற்றம், அத்தியாவசியப்பொருட்களுக்கான தட்டுப்பாடு உள்ளடங்கலாக அண்மையகாலங்களில் நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கின்றது.

இவ்வாறானதொரு பின்னணியில் நாட்டின் வங்கிச்செயற்பாடுகள் முழுமையாகப் பாதிப்படையக்கூடும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் காணப்படுகின்றது.

அதேவேளை இன்றையதினம் பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, அரச வங்கியொன்று வங்குரோத்து நிலையை அடைந்திருப்பதாகவும் இவ்விடயம் தொடர்பில் உடனடியாக அவதானம் செலுத்தப்படவேண்டும் என்றும் தெரிவித்தார்.

இவ்வாறானதொரு பின்னணியில் வங்கிக்கட்டமைப்புக்களின் ஸ்திரத்தன்மை குறித்துத் தெளிவுபடுத்தும் வகையில் இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்யப்பட்டிருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

'நாட்டின் வங்கிக்கட்டமைப்பு வலுவான நிலையில் இருப்பதுடன், அரச வங்கிகளின் செயற்பாடுகள் மிகவும் சுமுகமான முறையில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன என்பதை பொதுமக்களுக்கும் தொடர்புடைய ஏனைய தரப்பினருக்கும் உறுதிப்படுத்துகின்றோம்' என்று அப்பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33