நாட்டில் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற ரயில் விபத்துக்களில் இருவர் பலியாகியுள்ளனர்.

பொல்காவெல அலவ்வ பகுதிக்கு இடைப்பட்ட பூரியா பகுதியில் இன்று அதிகாலை ரயில் கடவையை கடக்க முயன்ற கார் ஒன்றின் மீது ரயில் மோதியதில் நபர் ஒருவர் பலியாகியுள்ளார்.

கனேவத்த பகுதியிலிருந்து பாணந்துறைக்கு பயணித்த ரயில் ஒன்றிலேயே கார் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

ரயில் வருவதற்கான எச்சரிக்கை சமிக்ஞை போடப்பட்டிருந்த போதும் கார் ரயில் கடவையை  கடக்க முற்பட்ட போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் குருநாகல் பொத்துஹெர பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய நபர் ஒருவர் பலியாகியுள்ளார்.

இதேவேளை மஹரகம பகுதியில் பெண்ணொருவர் ரயில் முன் பாய்ந்து நேற்று மாலை தற்கொலை செய்துகொண்டுள்ளார். பெத்தேகம பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.