தமிழக மீனவர்களை கைது செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம்

Published By: Digital Desk 4

24 Mar, 2022 | 03:48 PM
image

இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீண்டு வர பல ஆயிரம் கோடி ரூபாவை நிதி உதவியாக இந்திய அரசிடம் பெற்றுக் கொண்ட இலங்கை அரசு, அதற்கு கைமாறாக தமிழக மீனவர்கள் 16 பேரை சிறைப்பிடித்துள்ளதாக இராமேஸ்வரம் மீனவ சங்கத்தினர்  குற்றம் சாட்டியுள்ளனர். 

மேலும் இலங்கை கடற்படையின் இந்த கைது நடவடிக்கையை கண்டித்து நாளை வெள்ளிக்கிழமை (25)  முதல் இராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையறையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக இன்று வியாழக்கிழமை (24) காலை இராமேஸ்வரத்தில் நடத்திய அவசர ஆலோசனை கூட்டத்தில்   தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளனர்.

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் மற்றும் மண்டபம் மீன்பிடி துறைமுகங்களில் இருந்து அரசு மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று நேற்று காலை மீன் பிடிக்க கடலுக்குள் சென்ற இராமேஸ்வரத்தை சேர்ந்த 12 மீனவர்களையும், மண்டபத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் என மொத்தமாக 16 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விளக்கமறியலில் வைத்துள்ளனர்.

மீனவர்கள் மீதான இந்த  கைது நடவடிக்கையை கண்டித்து இன்று வியாழக்கிழமை (24) காலை இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் அனைத்து விசைப்படகு மீனவ சங்க மீனவர்கள் அவசர ஆலோசனை கூட்டமொன்றை நடத்தினர். 

கூட்டத்தில் இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து இலங்கை நாட்டை மீட்பதற்காக இந்திய அரசு பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி அளித்துள்ளது.

 

நிதி உதவியை பெற்றுக் கொண்ட இலங்கை அரசு அதற்கு கைமாறாக ஒரே இரவில் 16 மீனவர்களை சிறை பிடித்துள்ளது.

இதற்கு  இராமேஸ்வரம் மீனவ சங்கம் கடும் கண்டனத்தை பதிவு செய்துகொள்வதுடன், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்ததை கண்டித்து நாளை (25) முதல் இராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக முடிவு செய்துள்ளனர்.

இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டுள்ள இராமேஸ்வரம் மீனவர்களை உடனடியாக படகுடன் விடுதலை செய்ய வலியுறுத்தி எதிர்வரும் சனிக்கிழமை (26) காலை இராமேஸ்வரம் மத்திய பேருந்து நிலையம் எதிரே மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றினர்.

மீனவர்களின் இந்த காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தால் இராமேஸ்வரத்தில் உள்ள சுமார் 800 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடற்கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது.

 மேலும் மீன்பிடி தொழிலை மட்டுமே நம்பி வாழக் கூடிய சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழிலாளர்கள் சுமார் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர்  வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சீக்கிய செயற்பாட்டாளர் படுகொலை - அமெரிக்காவே...

2023-09-24 13:23:59
news-image

பெங்களூருவில் கன்னட அமைப்பினர் போராட்டம் :...

2023-09-24 14:33:39
news-image

உறுப்பு தானம் செய்வோருக்கு அரசு மரியாதையுடன்...

2023-09-23 12:24:13
news-image

ரஸ்யாவின் கிரிமியா கருங்கடல் கடற்படைதளத்தின் மீது...

2023-09-23 08:34:44
news-image

ஜி20 மாநாட்டில் பல தலைவர்கள் கனடா...

2023-09-22 14:58:18
news-image

உலகின் மிகப்பெரிய ஊடக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய...

2023-09-22 12:59:14
news-image

சீக்கிய செயற்பாட்டாளர் கொல்லப்பட்ட விவகாரம் -...

2023-09-22 13:05:48
news-image

புறா வளர்ப்பால் 2 நுரையீரலும் செயலிழந்த...

2023-09-22 10:47:19
news-image

இந்தியாவில் உள்ள கனடா தூதரக பணியாளர்களிற்கு...

2023-09-21 15:31:04
news-image

கனடாவுக்கான விசா சேவை இடைநிறுத்தம்: இந்தியா...

2023-09-21 13:16:58
news-image

ஐநா சபைக்குள் ஈரான் ஜனாதிபதிக்கு எதிராக...

2023-09-21 12:27:04
news-image

 வுஹான் ஆய்­வு­கூ­டத்­தி­லி­ருந்து கொவிட்19 கசிந்­தது என்­பதை  ...

2023-09-21 10:45:26