(எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்)
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் செயலற்றவராக உள்ளார்.அரசாங்கம் மக்களின் கருத்துக்கும், ஜனநாயகத்திற்கும் மதிப்பளிக்குமாயின் நாட்டு மக்கள் தன்னிச்சையாக ஆரம்பித்துள்ள 'கோ ஹோம் கோட்டா 'என்ற எதிர்ப்பிற்கு மதிப்பளித்து பதவி விலக வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.
பாராளுமன்றில் வியாழக்கிழமை (24) இடம்பெற்ற பெறுமதிசேர் வரி(திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்
னாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை ஸ்தாபித்த நாட்டு மக்கள் இரண்டரை வருட காலத்திற்குள் அரசாங்கத்தை கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
கோ ஹோம்,' கோடா என்ற எதிர்ப்பலைகள் நாடுதழுவிய ரிதியில் தோற்றம் பெற்றுள்ளதை அவதானிக்க முடிகிறது.பொருளாதார நெருக்கடி தீவிரமடைவதற்கு என்ன காரணம் என்பதை சற்று பொறுப்புடன் ஆராய வேண்டும்.
அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததை தொடர்ந்து தெரிவு செய்யப்பட்ட தரப்பினருக்கு 800 பில்லியன் நிவாரணம் வழங்கும் வகையில் வரி விலக்களித்தது.வரி நிவாரணம் வழங்கப்பட்டதை தொடர்ந்து அரச வருமானம் இழக்கப்பட்டதால் நாணயம் வரையறையற்ற வகையில் அச்சிடப்பட்டது.
அரச வருமானம் வரையறுக்கப்பட்ட நிலைமையில் எல்லைகடந்த நாணய அச்சிடல் பண வீக்கத்தை துரிதப்படுத்தியதால் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
நாட்டு மக்கள் இன்று எரிபொருள்,எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள்.
அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாடுகளினால் பொருளாதாரம் பாரிய நெருக்கடியினை எதிர்க்கொள்ளும் என ஆகவே முறையான தீர்மானங்களை அரசாங்கம் செயற்படுத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தினோம்.
சிறந்த ஆலோசனைகள் குறித்து கவனம் செலுத்தாமல் அரசாங்கம் தான்தோன்றித்தனமாக செயற்பட்டதால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது.இன்று பொருளாதார பாதிப்பிற்கும் தமக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என்ற நிலைப்பாட்டில் இருந்துக்கொண்டு ராஜபக்ஷரகள் செயற்படுகிறார்கள்.
பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் குறித்து ஜனாதிபதிக்கு எவ்வித அக்கறையும் கிடையாது.அண்மையில் சீனா நாட்டில் இடம்பெற்ற விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அனுதாபம் தெரிவித்து சோகத்தை வெளிப்படுத்தியுள்ள ஜனாதிபதி எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் இருந்து உயிரிழந்த நால்வர் குறித்து கனவம் செலுத்தவில்லை,சோகத்தை வெளிப்படுத்தவுமில்லை.
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் நோக்கில் ஜனாதிபதி தலைமையில் சர்வ கட்சி மாநாடு இடம்பெறவில்லை.
அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் மத்தியில் எழுந்துள்ள எதிர்ப்பினை திசைத்திருப்பி விடுவதற்காகவே சர்வ கட்சி மாநாடு நடத்தப்பட்டது.பொருளாதார பாதிப்பில் இருந்து மீள்வதற்காக செயற்படுத்த வேண்டிய பொதுவான விடயங்களுக்கு எதிர்க்கட்சியினர் என்ற ரீதியில் ஒத்துழைப்பு வழங்க தயார்.
பொருளாதார பாதிப்பிற்கு மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் முழு பொறுப்பு கூற வேண்டும'.ராஜபக்ஷர்கள் ஒன்றிணைந்து முழு நாடடையும் இல்லாதொழித்துள்ளார்கள்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கததில் செயலற்றவராக உள்ளார்.அரசாங்கம் நாட்டு மக்களின் கருத்துக்கும்,ஜனநாயகத்திற்கும் மதிப்பளிக்குமாயின் மக்கள் தன்னிச்சையாக ஈடுப்பட்டுள்ள 'கோ ஹோம் கோடா 'என்ற எதிர்ப்பிற்கு மதிப்பளித்து பதவி விலக வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM