மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோமத்தலாவெளி கிராம சேவகர் பிரிவில் பன்றிக்கு வைக்க்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்குண்டு குடும்பஸ்த்தர் உயிரிழந்துள்ளதாக வாகரை பொலிசார் தெரிவித்தனர்.
கோமத்தலாவெளி கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 32 வயதான சந்திரசேகரன் யோகேஸ்வரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பழப் பயிர் செய்கையில் ஈடுபட்டு வரும் குறித்த நபர் தன்னுடைய தோட்டத்துக்கு மின்சார சபையில் முறையாக மின்சாரம் பெறப்பட்டிருந்த நிலையில், தோட்டத்துக்குள் பன்றி மற்றும் காட்டு மிருகங்கள் வருவதினால் அவற்றில் இருந்து பயிர்களை பாதுகாப்பதற்காக முறையற்ற விதத்தில் மின்சாரததினை பயன்படுத்தியுள்ளார்.என பொலிசாரின் விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.
முறையற்ற விதத்தில் மின்சாரத்துடன் கம்பி இணைக்க்பட்டதினால் மின்சாரம் தாக்கி இந்த உயிரிழப்பு இடம்பெற்றுள்ளதாக வாகரை பொலிசார் தெரிவித்துள்ள நிலையில், சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்க்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM