சித்திரைப் புத்தாண்டுக்கு முன் மக்களுக்கு நிவாரணம் - பஷில் 

By T Yuwaraj

23 Mar, 2022 | 10:58 PM
image

(இராஜதுரை ஹஷான்)

நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில்  சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் புதிய வரவு –செலவு திட்டத்தை சமர்ப்பிக்கவுள்ளேன்.

சர்வ கட்சி கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கமைய வரவு –செலவு திட்டத்தை மறுசீரமைக்க தீர்மானித்துள்ளேன்.

நாட்டு மக்கள் பாரிய பொருளாதார நெருக்கடியினை எதிர்க்கொண்டுள்ளார்கள் என்பதை அரசாங்கம் ஒருபோதும் மறுக்கவில்லை என நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

May be an image of 3 people, people sitting, people standing and indoor

ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ தலைமையில் புதன்கிழமை (23) இடம்பெற்ற சர்வகட்சி கூட்டத்தில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண அரசாங்கம் பல்துறைகளில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளது.

எரிபொருள் இறக்குமதியில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமை தற்போது சமூகட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைக்கு பிரதான காரணியாக அமைகிறது.

நாட்டின் சுயாதீனத்தன்மைக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் மின்வலுத்துறை தொடர்பிலான அபிவிருத்தி ஒப்பந்தங்களை முன்னெடுக்கவில்லை என்பதை தெளிவாக குறிப்பிட்டுக்கொள்ள வேண்டும்.உணவு பாதுகாப்பு குறித்து அரசாஙகம் விசேட கவனம் செலுத்தியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை இலங்கை நாடுவது இதுவொன்றும் முதல் தரமல்ல,இலங்கையின் பொருளாதார நிலைமை குறித்து இலங்கையில் உள்ள சர்வதேச நாணய நிதியத்தின் காரியாலயம் ஒவ்வொரு வருடமும் அறிக்கை சமர்ப்பிக்கு;ம்.

இலங்கை தொடர்பான சர்வதேச நாணய நிதியத்தின் முழுமையான அறிக்கை இதுவரையில் கிடைக்கப் பெறவில்லை மூல வரைபு மாத்திரம் கிடைக்கப்பெற்றுள்ளது.

முழுமையான தரப்படுத்தலுடன் அறிக்கை கிடைத்ததும் அதனை நிதியமைச்சர் என்ற ரீதியில் பாராளுமன்றில் உத்தியோகப்பூர்வமாக பாராளுமன்றில் சமர்ப்பிப்பேன்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளவும்,கடன் முகாமைத்துவம் செய்யவும் அமைச்சரவை மட்டத்தில் இரண்டு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜி.எல் பீரிஸ் தலைமையில் தொழினுட்ப குழு நியமிக்கப்பட்டுள்ளது.

 நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் வரவு –செலவு திட்டத்தை மறுசீரமைக்குமாறு சுதந்திர கட்சி,ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள யோசனைகளை ஏற்றுக்கொள்கிறேன்.

வரவு செலவு செலவு திட்டம் மறுசீரமைக்கப்பட்டு அதனூடாக நாட்டு மக்களுக்கு சித்திரை புத்தாண்டு காலத்திற்கு முன்னர் நிவாரணம் வழங்கப்படும்.வர்த்தகத்துறை அமைச்சு ஊடாக நிவாரண பொதி வழங்கும் திட்டம் விரிவுப்படுத்தப்படும்.

ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ அரச செலவினங்களை இயலுமான அளவு குறைத்துக்கொண்டுள்ளார்.2021ஆம் ஆண்டு நிதியமைச்சின் செலவுகள் 51 பில்லியன்களாக குறைக்கப்பட்டுள்ளது.நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.மக்களுக்கு நிச்சயம் நிவாரணம் வழங்கப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழ் மக்கள் தங்கள் அடையாளம் சுயமரியாதையை...

2022-12-02 16:44:44
news-image

கபூரியா மத்ரஸா விவகாரம் : 'வக்பு'...

2022-12-02 16:51:09
news-image

பல்கலைக்கழகத்திற்கு 44,000 மாணவர்களை உள்வாங்க நடவடிக்கை...

2022-12-02 16:18:11
news-image

ஐந்து வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் மத்தியில்...

2022-12-02 15:20:16
news-image

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியாகின!

2022-12-02 14:57:28
news-image

ஒதியமலை படுகொலையின் 38 ஆவது நினைவேந்தல்...

2022-12-02 15:21:09
news-image

பொல்பித்திகமவில் கைவிடப்பட்ட நிலையில் குழந்தை !

2022-12-02 14:45:00
news-image

பன்னலயில் பாடசாலை மாணவியிடம் கருத்தடை மாத்திரைகள்...

2022-12-02 14:33:00
news-image

15 வயதான மாணவி பாலியல் துஷ்பிரயோகம்...

2022-12-02 13:44:58
news-image

விபசார நடவடிக்கைக்காக ஓமானுக்கு இலங்கைப் பெண்கள்...

2022-12-02 13:39:28
news-image

பாராளுமன்றத்தில் தேவையற்ற பேச்சுக்களை பேசி நேரத்தை...

2022-12-02 14:51:46
news-image

10 மாதங்களில் 12,000 சமூக ஊடகங்கள்...

2022-12-02 13:28:32