(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
அரசாங்கம் காணி ஏல விற்பனையாளர் போல் வெளிநாடுகளுக்கு நாட்டு வளங்களை விற்பனை செய்துவருகின்றது. அதனால் அரசாங்கத்திடமிருந்து எமது காணிகளை பாதுகாத்துக்கொள்ளவேண்டிய நிலை மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது என எதிர்க்கட்சி உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (23) இடம்பெற்ற காணி அபிவிருத்தி கட்டளைச்சட்டத்தின் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
காணி உரிமை தொடர்பில் நாங்கள் கதைத்துக்கொண்டிருக்கின்றோம். ஆனால் அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது முதல் நாட்டில் இருக்கும் மிகவும் பெறுமதியான காணிகளை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்துவருகின்றது.
காணி ஏல விற்பனை செய்யும் அரசாங்கமாக மாறி இருக்கின்றது. கிழக்கு மாகாணத்தில் இருக்கும் அரசாங்கத்துக்கு சொந்தமான பாரியளவிலான காணி இந்தியாவுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.
நிதி அமைச்சர் கடந்த வாரம் இந்தியாவுக்கு சென்றுவந்தார். அவர் அந்த நாட்டுடன் பல ஒப்பந்தங்களை செய்திருந்தார். அதன் காரணமாக இந்திய அரசாங்கம் ஒரு பில்லியன் டொலர் கடன் வழங்கி இருக்கின்றது.
எந்த ஒப்பந்தங்கள் மூலம் இந்த பணம் வழங்கப்பட்டது தொடர்பில் யாருக்கும் தெரியாது. அதேபோன்று சீன அரசாங்கத்திடம் இரண்டரை டொலர் பில்லியன் கடன் கேட்டிருக்கின்றது. அதற்கு நாட்டின் முக்கியமான காணிகளை சீனாவுக்கு வழங்குவதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டிருக்கின்றது.
அத்துடன் நாட்டில் மின் உற்பத்தியை மேற்கொள்ள முடியுமான இடங்களை அமெரிக்காவுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திரைக்கின்றது. அப்படியானால் அரசாங்கம் காணி ஏல விற்பனையாளர் போன்றே செயற்படுகின்றது. அதனால் இந்த அரசாங்கத்திடம் இருந்து காணிகளை பாதுகாத்துக்கொள்ளவே நாட்டுக்கு ஏற்பட்டிருக்கின்றது.
மக்களால் அரசாங்கம் அமைக்கப்படுவது தற்காலிகமாகவாகும். ஆனால் அரசாங்கம் அடுத்துவரும் சந்ததியினருக்கு உரித்தான காணிகளையே வெளிநாடுகளுக்கு வழங்கி வருகின்றது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM