(எம்.மனோசித்ரா)
2022 கல்வி ஆண்டுக்கான பாடப்புத்தகங்களில் 38 மில்லியனுக்கும் அதிகமானவை அச்சிடப்பட்டு பிரதான களஞ்சியசாலைகளும், பாடசாலைகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.
இவ்வாண்டுக்கான முதலாம் தவணை ஆரம்பமாகும் போது முழுமையாக பாடப்புத்தகங்கள் வழங்கும் பணிகள் நிறைவடையும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.
அத்தோடு கடந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சைகள் மே மாதம் திட்டமிட்ட படி இடம்பெறும் என்றும் பேராசிரியர் கபில பெரேரா சுட்டிக்காட்டினார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்கிழமை (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
பாடநூல்கள்
2022 கல்வி ஆண்டுக்கான பாடப்புத்தகங்களில் 38 மில்லியனுக்கும் அதிகமானவை அச்சிடப்பட்டு பிரதான களஞ்சியசாலைகளும் , பாடசாலைகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.
இவற்றில் 5.5 மில்லியன் புத்தகங்கள் கடந்த ஆண்டு அச்சிடப்பட்டு எஞ்சியவையாகும். இவ்வாறு பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்காக 2338 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
அதற்கமைய மொத்த தேவையில் 98 சதவீதமான புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. எஞ்சிய 2 வீத புத்தகங்கள் இவ்வாண்டுக்கான முதலாம் தவணை ஆரம்பமாகியவுடன் வழங்கப்படும்.
சீருடை வழங்குவதற்கான 11 மில்லியன் அடி துணிக்கான விலைமனு கோரப்பட்டுள்ளது. இந்நடவடிக்கைகள் 98 சதவீதம் நிறைவடைந்துள்ளது.
பரீட்சைகள்
2021 டிசம்பரில் இடம்பெறவிருந்த கல்விப் பொதுத் தராதர பரீட்சைகள் மே மாதம் 23 ஆம் திகதி ஆரம்பமாகி , ஜூன் முதலாம் திகதி வரை நடைபெறும்.
ஏப்ரல் 18 ஆம் திகதி இவ்வாண்டுக்கான முதலாம் தவணை ஆரம்பமாகும். அதற்கமைய ஏப்ரல் 18 முதல் டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் இவ்வாண்டுக்கான 3 தவணைகளையும் நிறைவு செய்வதற்கும் , இவ்வாண்டுக்குரிய உயர்தர பரீட்சைகள், புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் சாதாரண பரீட்சை என்பவற்றை நடத்தி முடிப்பதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.
தேசிய பாடசாலை திட்டம்
சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தின் கீழ் ஆயிரம் தேசிய பாடசாலைகளை உருவாக்கும் வேலைத்திட்டம் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் இதுவரையில் 373 தேசிய பாடசாலைகள் உள்ளன. எனினும் எந்தவொரு தேசிய பாடசாலைகளும் அற்ற 125 பிரதேச செயலக பிரிவுகள் அடையாளங்காணப்பட்டுள்ளன.
அதற்கமைய குறித்த 125 பிரதேச செயலகப் பிரிவுகளையும் உள்ளடக்கி மேலும் 831 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக்கப்படவுள்ளன.
அதற்கமைய நாட்டில் மொத்த தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கை 1204 ஆக உயர்வடையவுள்ளது. தேசிய பாடசாலை திட்டத்திற்காக 2021 ஆம் ஆண்டு 1950 மில்லியன் ரூபாவும் , இவ்வாண்டு கல்வி அமைச்சிற்கு 5300 மில்லியன் ரூபாவும் , கல்வி இராஜாங்க அமைச்சிற்கு 2000 மில்லியன் ரூபாவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டில் 542 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக்கப்படவுள்ளன. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சகல மாகாணங்களையும் உள்ளடக்கும் வகையில் 52 மகளிர் பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக்கப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM