'தெய்வீக ஆடல் 2022' - பரதநாட்டிய பயிற்சிப்பட்டறை

23 Mar, 2022 | 01:50 PM
image

இந்திய உயர் ஸ்தானிகராலயம் கொழும்பு மற்றும் நாட்டிய கலா மந்திர் இணைந்து பெருமையுடன் வழங்கும் 'தெய்வீக ஆடல் 2022' பரதநாட்டிய பயிற்சிப்பட்டறை எதிர்வரும் 27 ஆம் திகதி மார்ச் 2022 மாலை 4.00 மணி முதல் 7.00 மணி வரை கொழும்பு தமிழ்ச்சங்கம் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. 

குரு கலாசூரி ஸ்ரீமதி வாசுகி ஜெகதீஸ்வரனின் வழிகாட்டலில் அவரது சிரேஷ்ட மாணவியரால் நிகழ்த்தப்படவுள்ளது. 

இந்நிகழ்வில் ஊடகவியலாளர் கலைஞர் 'செஞ்சொற்செல்வர் ஸ்ரீ எஸ். விஸ்வநாதனும் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

இவ் இலவச பயிற்சிப்பட்டறைக்கு பரதம் பயிலும் மாணவர்கள் மற்றும் கலைஞர்கள் அனைவரையும் நாட்டிய கலா மந்திர் அன்புடன் அழைக்கின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right