(என்.வீ.ஏ.)
மகளிர் சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் பாஹ்ரெய்ன் அணியைச் சேர்ந்த தீப்பிகா ரசங்கிகா, அதிகூடிய ஓட்டங்களுக்கான உலக சாதனையை நிலைநாட்டியுள்ளார்.
வளைகுடா கூட்டுறவு பேரவை (கல்வ் கோர்ப்பரேஷன் கவுன்சில் - ஜீசிசி) மகளிர் இருபது 20 வல்லவர் கிண்ண கிரிக்கெட் போட்டி ஒன்றிலேயே தீப்பிகா ரசங்கிகா உலக சாதனை நிலைநாட்டினார்.
இவர் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீராங்கனையாவார்.
சவுதி அரேபியா அணிக்கு எதிராக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜீசிசி மகளிர் இருபது 20 வல்லவர் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாஹ்ரெய்ன் சார்பாக 66 பந்துகளில் 31 பவண்ட்றிகளை விளாசி ஆட்டமிழக்காமல் 161 ஓட்டங்களைப் பெற்ற 38 வயதான தீப்பிகா ரசங்கிகா தனிநபருக்கான அதிகூடிய ஓட்டங்களுக்குரிய உலக சாதனையை ஏற்படுத்தினார்.
இதற்கு முன்னர் மகளிர் சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு எதிராக 2019இல் சிட்னியில் அவுஸ்திரேலியாவின் அலிசா ஹீலி பெற்ற ஆட்டமிழக்காத 148 ஓட்டங்களே தனிநபருக்கான அதிகூடிய ஓட்டங்களாக இருந்தது.
சவூதி அரேபியாவுடனான போட்டியில் 43 பந்துகளில் 100 ஓட்டங்களைப் பூர்த்திசெய்த தீப்பிகா ரசங்கிகா, அணித் தலைவி தரங்கா கஜநாயக்கவுடன் பிரிக்கப்படாத 2ஆவது விக்கெட்டில் 255 ஓட்டங்களைப் பகிர்ந்து மகளிர் சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் அவ் விக்கட்டுக்கான அதிகூடிய இணைப்பாட்ட சாதனையையும் படைத்தார்.
தரங்கா கஜநாயக்க 56 பந்துகளில் 17 பவுண்ட்றிகளுடன் ஆட்டமிழக்காமல் 94 ஓட்டங்களைப் பெற்றார்.
இலங்கை வம்சாவழியான 38 வயதுடைய தரங்கா கஜநாயக்க, கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகத்தின் முன்னாள் வீராங்கனையாவார்.
பாஹ்ரெய்ன் அணியில் இடம்பெறும் மற்றொரு இலங்கை வம்சாவழியான 41 வயதுடைய ரசிகா ரொட்றிகோ நேற்றைய போட்டியில் 13 ஓட்டங்களைப் பெற்றார்.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாஹ்ரெய்ன் 20 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 318 ஓட்டங்களைக் குவித்தது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சவூதி அரேபியா 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 49 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
பாஹ்ரெய்ன் பந்துவீச்சில் தீப்பிகா ரசங்கிகா 9 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் சச்சினி ஜயசிங்க (மற்றொரு இலங்கை வம்சாவழி) 14 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM