இந்தியாவிடம் பெற்ற கடனை மொட்டு கட்சி ஆதரவாளர்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் வேலைத்திட்டம் - வெட்கப்படவேண்டும் என்கிறார் சஜித்

By T Yuwaraj

22 Mar, 2022 | 10:11 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

நாட்டின் பொருளாதார நெருக்கடியை சமானிக்க இந்திய அரசாங்கத்தினால்  வழங்கப்பட்டிருக்கும் ஒரு பில்லியன் டொலர் கடன் தொகையை பயன்படுத்திக்கொண்டு அரசாங்கம் மொட்டு கட்சி ஆதரவாளர்களுக்கு நிவாரணம் வழங்கி தேர்தல் ஒன்றுக்கு முயற்சிக்கின்றது. இது வெட்கப்படவேண்டிய செயலாகும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

1000 ரூபா சம்பளத்திற்குப் பின்னால் மறைந்திருக்கும் மர்மத்தை சபையில்  போட்டுடைத்தார் சஜித் | Virakesari.lk

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டில் ஏற்பட்டிருக்கும் எரிபொருள் பிரச்சினை காரணமாக எரிபொருள் பெற்றுக்கொள்ள வரிசையில் இருந்த 4பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

இது பாரிய பிரச்சினை. மக்கள் வாழமுடியாத பிரச்சினையாகும். அதனால் நாட்டின் நிலைமையை கருத்துற்கொண்டு இந்திய அரசாங்கம் ஒரு பில்லியன் டொலர் கடன் வழங்க தீர்மானித்திருக்கின்றது.

அதனை வழங்குவது தொடர்பில் எம்மிடமும் கேட்டிருந்தார்கள். நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடியில் அதனை வழங்குவதறகு நாங்களும் ஆதரவளித்தோம். 

என்றாலும் இந்த பணத்தை பயன்படுத்தி 14ஆயிரம் கிராமசேவகர் பிரிவுகளை அடிப்படையாக்கொண்டு, வீட்டுக்கடை என வேலைத்திட்டம் அமைத்துக்கொண்டு அவற்றுக்கு 8இலட்சம் ஒதுக்கிக்கொண்டு, பொதுஜன பெரமுன ஆதரவாளர்களுக்கு 2ஆயிரம் ரூபா கூப்பன் அட்டை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஒன்றுக்கு தயாராகும் முயற்சியே இதன் மூலம் முயற்சிக்கின்றனர். இதனை மிகவும் பொறுப்புடன் தெரிவிக்கின்றேன்.

ஏனெனில் தற்போதும் மாகாணசபை தேர்தல் சட்டத்தில் தங்களுக்கு நன்மை ஏற்படும் வகையில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதனால் நாட்டில் ஏற்பட்டிருக்கும் வரிசை யுகத்தினால் மக்கள் பாரிய கஷ்டத்தை அனுபவிக்கின்றனர். இந்த நெருக்கடி அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்டதாகும். அரசாங்கம் ஆட்சிக்கு வந்த, ஆரம்பத்திலேயே வரி குறைப்பு செய்து தனவந்தர்களுக்கு சம்பாதித்துக்கொள்ள இடமளித்தது. இதனால் நாட்டின் வருமானம் இல்லாமல்போனது.

அத்துடன் பொருளாதார நெருக்கடி காரணமாக மேல் மாகாணத்தில் பாடசாலைகளில்  பரீட்சையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது. மின்சார கட்டணத்தை நூற்றுக்கு 500வீதம் அதிகரிப்பதற்கும் நீர் கட்டணத்தை அதிகப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரியவருகின்றது. இந்நிலையில் மக்கள் எதிர்கொண்டுள்ள வரிசை யுகத்தை இல்லாமலாக்கி, காஸ் பற்றக்குறையை இல்லாமலாக்க அரசாங்கம் மேற்கொள்ளும் வேலைத்திட்டம் என்ன என கேட்கின்றேன்.

பிள்ளைகளுக்கு தேவையான பால்மாவை பெற்றுக்கொடுக்க முடியாமல் தாய்மார்கள் வீதியில் கஷ்டப்படுகின்றனர். பால் தேநீர் ஒரு கோப்பை 100ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது. இவ்வாறான நிலைமையில் மக்கள் எவ்வாறு வாழ்க்கையை கொண்டுசெல்வது. மக்கள் வாழ்வதற்கு போராடும் நிலையில் அரசாங்கம் இந்திய அரசாங்கத்தினால் கடைக்கப்பெற்றுள்ள ஒரு பில்லியன் ரூபா கடன் உதவியை பயன்படுத்திக்கொண்டு, மொட்டு கட்சி ஆதரவாளர்களுக்கு நிவாரணம் வழங்கி தேர்தல் வியாபாரத்துக்கு முயற்சிக்கின்றது. இது மிகவும் வெட்கப்படவேண்டிய விடயம்.

அதனால் இந்திய அரசாங்கம் வழங்கி இருக்கும் கடன் தொகை மூலம் அரசாங்கம் மேற்கொள்ளும் அனைத்துவேலைத்திட்டங்களின் அறிக்கைகளை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும் என பிரேரணை முன்வைக்கின்றேன். அதனால் இந்தியாவின் கடன் தொகையின் மூலம் பட்டினியுடனும் தாகத்துடனும் வரிசையில் இருக்கும் மக்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்கவேண்டும் என அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சட்டவிரோத குடியேற்ற வாசிகளை அவுஸ்திரேலியா அரசாங்கம்...

2022-11-30 09:09:51
news-image

உள்ளூராட்சி, மாகாணசபை தேர்தல்களை தாமதமின்றி நடத்தவேண்டும்...

2022-11-30 09:02:29
news-image

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

2022-11-30 08:45:56
news-image

நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்யும்!

2022-11-30 08:50:50
news-image

உள்நாட்டில் பயிற்சிகளைப் பெற்று வெளிநாடு செல்லும்...

2022-11-29 21:43:22
news-image

சுகாதாரத்துறை ஆபத்துக்குள் தள்ளப்படும் நிலை :...

2022-11-29 21:48:08
news-image

பாராளுமன்ற செயற்பாடுகளை புறக்கணிப்போம் - லக்ஷமன்...

2022-11-29 21:56:33
news-image

இளம் தலைமுறையினரின் எதிர்காலத்தை சீரழிக்க வேண்டாம்...

2022-11-29 21:58:30
news-image

அதிகாரப் பகிர்வுக்கு ஆளுங்கட்சி இணங்குமா ?...

2022-11-29 16:21:19
news-image

பாடசாலை மாணவர்களை கடத்த முயற்சித்த  குற்றச்சாட்டில்...

2022-11-29 22:16:06
news-image

மருந்து உற்பத்தி வழிகாட்டலில் மாற்றத்தை ஏற்படுத்தினால்...

2022-11-29 16:06:19
news-image

 'றோ' தலைவருடனான சந்திப்பு குறித்து பாராளுமன்றத்திற்கு...

2022-11-29 15:32:40